

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு மகள்களை தனியாக வளர்த்து வந்த நிலையில் மூத்த மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நடந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகளான 22 வயதுடைய சண்முகப்பிரியா இளங்கலை கல்வியியல் படித்து விட்டு அருகில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதனிடையே சண்முகப்பிரியா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் படித்து வந்த சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் சில மாதங்களில் கௌதமின் நடவடிக்கை சரியில்லாததால் சண்முகப்பிரியா காதலை கைவிட்டு கௌதமுடன் பேசுவதை நிறுத்தி கொண்டிருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து கௌதம் சண்முகப்பிரியாவிற்கு காதல் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் செல்போனில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சண்முகப்பிரியாவிற்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கெளதம் காதலிக்கும் போது நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை மாப்பிளை வீட்டிற்கு அனுப்பி வைத்து திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்.
மேலும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விடுவேன் என கூறி சண்முகப்பிரியாவை கௌதம் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சண்முகப்பிரியா ஆற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் நேற்று சண்முகப்பிரியா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சண்முகப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து வாள்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது சண்முகப்பிரியாவின் அறையில் இருந்து நான்கு பக்கங்கள் உள்ள ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் “நான் எடுப்பது கோழைத்தனமான முடிவு தான் ஆனால் எனக்கு வேற வழி தெரியல இந்த முடிவுக்கு காரணம் கெளதம் தான் அவனை சும்மா விடாதீங்க, நான் நல்ல வாழ ஆசைப்பட்ட ஆன அவன் விடமாட்டான் அவனை மட்டும் சும்மா விட்றாதீங்க, ஜாதகத்தை வேற கட்டிட்டு அழுவுறீங்க அது இல்லனா கூட நன் உயிரோடவாவது இருந்திருப்பேன்” என எழுதியுள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இது சண்முகப்பிரியா எழுதியது தானா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர் காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.