“சாக்லேட் தருகிறேன் வா” - மாணவியை தனியாக அழைத்துச் சென்று அத்துமீறிய மளிகைக் கடை ஊழியர்.. ஆசிரியரால் வெளியான உண்மை!

35 வயதுடைய பழனிச்சாமி என்பவர் மாணவியின் இயலாமையை பயன்படுத்தி கொண்டு...
pocso case
pocso case
Published on
Updated on
1 min read

சென்னை சாலிகிராமம் பகுதியில் மனவளர்ச்சி குறைபாடு கொண்ட 18 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு வரும்போது சக மாணவிகளுக்கு சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை தொடர்ந்து வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இதனை கவனித்த பள்ளி ஆசிரியை, மாணவியிடம் தினமும் இவ்வளவு தின்பண்டங்களை வாங்குவதற்கு பணம் எப்படி கிடைக்கிறது என சந்தேகமடைந்துள்ளார். மேலும், மாணவியின் நடவடிக்கையிலும் சில மாற்றங்கள் இருப்பதை கவனித்த ஆசிரியை, அவரை தனியாக அழைத்து விசாரித்துள்ளார்.

அப்போது, பள்ளிக்கு வரும் வழியில் உள்ள மளிகைக் கடையில் பணியாற்றி வரும் ஒருவர் தன்னை தினமும் அழைத்து சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்டவற்றை கொடுத்து, தனியாக அழைத்து சென்று அத்துமீறியதாக கூறியுள்ளார். சிறுமிக்கு இது பாலியல் அத்துமீறல் என்று தெரியாமல் தினமும் நடந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவியின் பெற்றோர் அவரை அழைத்து கொண்டு விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திரற்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காரைக்குடியைச் சேர்ந்த மளிகைக் கடை ஊழியரான 35 வயதுடைய பழனிச்சாமி என்பவர் மாணவியின் இயலாமையை பயன்படுத்தி கொண்டு தினமும் சாக்லேட், கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை மீது குழந்தைகளுக்கு எதிரனாக குற்றத்திற்காக போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். மனவளர்ச்சி குறைந்த பள்ளி மாணவியிடம் மளிகை கடை ஊழியர் சாக்லேட் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com