கடையை சாத்திவிட்டு சந்து வழியாக சென்ற பாஜக பிரமுகர்.. தலையை துண்டித்த மர்ம கும்பல் ! தாக்குதலின் பின்னணி என்ன?

சரண்யா எந்த கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை
saranya
saranya
Published on
Updated on
1 min read

மதுரை சேர்ந்த சரண்யா (வயது 35) இவருக்கு சண்முக சுந்தரம் என்பவருடன் திருமணமாகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும் 13 வயதில் சரவணன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்து விட்ட நிலையில் சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா கழுகபுலி கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய பாலன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பாலனும் சரண்யாவும் உதய சூரியம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பமாக வசித்து வந்துள்ளனர். சரண்யா மதுரை மத்திய தொகுதியில் பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்தார். உதய சூரியம் பகுதி கடைத்தெருவில் பாலன் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து நடத்தி வந்துள்ளனர்.

வழக்கம் போல் நேற்று (மே 05) சரண்யாவும் பலனும் கடையை பூட்டி உள்ளனர்.பின்னர் பாலனும் இரண்டு பிள்ளைகளும் வீட்டிற்கு வண்டியில் சென்றுள்ளனர். சரண்யாவும் அவரது கடையில் வேலை செய்யும் பெண்ணும் கடைக்கும் வீட்டிற்கும் 1 கிலோமீட்டர் தூரம் என்பதால் நடந்தே செல்லலாம், என நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சந்து வழியாக சென்றுள்ளனர். அங்கு வந்த மர்ம நபர்கள் சரண்யாவின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமறியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த லட்சுமணன் உடலுக்கு திமுக அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் அஞ்சலி செலுத்த வந்த போது மதுரை விமான நிலையத்தில், அமைச்சரின் காரில் செருப்பு வீசப்பட்ட வழக்கில் சரண்யா முக்கிய குற்றவாளி என்பதும் , மாநில தலைவர் அண்ணாமலை பதவியிலிருந்து விலகிய பிறகு, சரண்யா எந்த கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சாவூரை சேர்ந்த கபிலன் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குகன் மற்றும்  மதுரையை பார்த்திபன் ஆகியோர் சரணடைந்துள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com