“அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமைகள்” - பள்ளி சிறுமிகளை கடத்தி சீரழிக்கும் வாலிபர்கள்… அச்சத்தில் உறைந்த விழுப்புரம் மக்கள்!

இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று செஞ்சி சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் வைத்து...
“அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமைகள்” - பள்ளி சிறுமிகளை கடத்தி சீரழிக்கும் வாலிபர்கள்… அச்சத்தில் உறைந்த விழுப்புரம் மக்கள்!
Published on
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நரசிங்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் 19 வயதுடைய சாரதி. இவர் அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வந்திருக்கிறார். அந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக மாணவி பள்ளிக்கு செல்லும் போதும் மீண்டும் வீடு திரும்பும் போதும் பின் தொடர்ந்து தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த மாணவி தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த சாரதி கடந்த சில மதங்களுக்குமுன்பு பள்ளிக்கு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று செஞ்சி சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் இது குறித்து சிறுமி புகார் அளித்த நிலையில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் சாரதியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Admin

இதேபோன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிங்கவரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் வினோத் குமார் என்பவரை செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது அதே போல் மற்றொரு பள்ளி மாணவியை மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வனப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் கடுமையான தண்டனை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கு செல்லும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், அவ்வப்போது பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்தில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com