“லீவ் கேட்ட பெண் போலீசை உடலுறவுக்கு கூப்பிட்ட அதிகாரி” - ‘மச்சான்’ என அழைக்க சொல்லி டார்ச்சர்… கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட காவலர்!

மேனகாவை உடல் ரீதியாகவும் துன்புறுத்தி கொலை முயற்சி செய்ததாக...
“லீவ் கேட்ட பெண் போலீசை உடலுறவுக்கு கூப்பிட்ட அதிகாரி” - ‘மச்சான்’ என அழைக்க சொல்லி டார்ச்சர்… கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட காவலர்!
Published on
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம் சதர் கோட்வாலி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் மேனகா. இவர் கடந்த சில திங்களக்கு முன்பு தனது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை உடன் இருந்து பாதுகாத்து கொள்ள தனது காவல் நிலைய உயர் அதிகாரியான தினேஷ் சந்திரா என்பவரிடம் விடுப்பு கேட்டிருக்கிறார். தொடக்கத்தில் விடுப்பு தர மறுத்த தினேஷ் சந்திரா பின்னர் மேனகாவை தனியாக அழைத்து தனது தனிப்பட்ட கைபேசி எண்ணை கொடுத்து பணி முடிந்து போன் செய்ய கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மேனாகவும் தனது விடுப்பு குறித்து கேட்க அவரது எண்ணிற்கு போன் செய்து பேசிய போது தினேஷ் சந்திரா “விடுப்பு வேண்டும் என்றால் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், அவ்வப்போது தனது தனிப்பட்ட எண்ணிற்கு அடிக்கடி போன் செய்து பேச வேண்டும் என்றும் தன்னை மச்சான் (jija) என்று அழைக்க வேண்டும்” எனவும் கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மேனகா மறுப்பு தெரிவித்து போனை துடித்திருக்கிறார்.

தனது ஆசைக்கு அடி பணியாத மேனகா மீது ஆத்திரமடைந்த தினேஷ் சந்திரா தொடர்ந்து பணிக்கு வந்த மேனகாவிற்கு வேலையில் அதிக பணிச்சுமை கொடுத்ததும் தொடர்ந்து தொல்லை செய்து வந்திருக்கிறார். மேலும் மேனகாவை உடல் ரீதியாகவும் துன்புறுத்தி கொலை முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில் மேனகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை பார்த்த உயர் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தினேஷ் சந்திரா பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் கொலை முயற்சி செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை கைது செய்த காவல்துறை தொடர்ந்து தனிப்படை அமைத்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தினேஷ் சந்திரா, மேனகாவிற்கு மட்டும் இல்லாமல் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மற்ற பெண் காவலர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com