“இரண்டு கள்ளகாதலர்களுடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட திலீபன்… காதலியை முடிக்க சிலிண்டரை வெடிக்க வைத்த கொடூரம்!

அறிந்த பிரேமானந்த் பலமுறை எஸ்தரிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி கண்டித்திருக்கிறார்...
“இரண்டு கள்ளகாதலர்களுடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட திலீபன்… காதலியை முடிக்க சிலிண்டரை வெடிக்க வைத்த கொடூரம்!
Published on
Updated on
2 min read

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சின்னப்பையன் நகர் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய பெண் அன்பு எஸ்தர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நபருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே அன்பு எஸ்தர் சூலூரில் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பிரேமானந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பலகை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர்.

மேலும் அன்பு எஸ்தரின் கணவர் ஊரில் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அன்பு எஸ்தருக்கு தேவையான பணத்தை கொடுத்து அவருக்கு குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொடுப்பதை பிரேமானந்த் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இருவரும் தொடர்ந்து நான்கு வருடங்களாக பழகி வந்த நிலையில் அன்பு எஸ்தர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள உணவகத்திற்கு காய்கறி வெட்டி கொடுக்கும் வேலைக்கு சென்றிருக்கிறார்.

Admin

அப்போது எஸ்தருக்கும் அந்த கடை நடத்தி வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த 37 வயதுடைய திலீபன் என்பவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டு எஸ்தர் திலீபனுடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதனை அறிந்த பிரேமானந்த் பலமுறை எஸ்தரிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி கண்டித்திருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து எஸ்தர் வேலைக்கு செல்வது போல திலீபனுடன் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த பிரேமானந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவகத்திற்கு சென்று இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் எஸ்தருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்ட நிலையில் திலீபனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திலீபன் இதுகுறித்து போலீசில் புகாரளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேமானந்த்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அதிலிருந்து ஜாமினில் வெளியே வந்த பிரேமானந்த் தொடர்ந்து எஸ்தருடன் பழகி வந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் எஸ்தர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு எஸ்தரும் திலீபனும் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்து திலீபனை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார்.

Admin

பின்னர் பிரேமானந்த் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டரைத் திறந்துவிட்டு வீட்டை வெடிக்கச் செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரேமானந்தின் இரண்டு கைகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த சூலூர் காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று காயமடைந்த அன்பு எஸ்தர் மற்றும் பிரேமானந்த்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த திலீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com