“21 வயது பெண்ணுக்கு நடந்த பாலியல் தொல்லை” - உதவி செய்வதாக கூறி அத்துமீறிய 60 வயது முதியவர்!

அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கிருந்து வெளியே ஓடி வந்து..
Sexual harassment
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 21 வயது இளம்பெண் கோயம்புத்தூர் விராலியூரில் உள்ள தனியார் கல்லூரியில்  தேர்வு கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது பெண் தோழிகளுடன் விராலியூரில் வாடகை வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே பகுதியில் வசித்து வந்த அருணன் (60), என்ற முதியவர் அவர்களுக்கு உணவு செய்து வழங்கி வந்துள்ளார். அதனால் அவ்வப்போது அந்த பெண்கள் சென்று வருவதை வழக்கமாக வந்திருந்துள்ளார். இதே போல் கடந்த புதன்கிழமை காலை அருணன், மஞ்சுளா மற்றும் அவர்களது தோழிகள் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது டீ குடித்த டம்ளரை கழுவிக் கொண்டிருந்த மஞ்சுளாவை முதியவர் அருணன் பின்புறம் இருந்து கட்டிப்பிடித்து, அருவருக்கத்தக்க தவறான தொடுதலில் ஈடுபட்டுள்ளார். மேலும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவரை தடுக்க முயன்ற மஞ்சுவையும் கடுமையாக தாக்கியுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கிருந்து வெளியே ஓடி வந்து தெருவில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள், அவருக்கு முதலுதவி அளித்து விசாரித்து உள்ளனர். பின்னர் தொண்டாமுத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனையடுத்து இளம்பெண் மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் கோயம்புத்தூர் ஆலந்துறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, முதியவர் அருணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு நடத்தினர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து வேலைக்காக வெளியூர் வந்து தனியாக வசிக்கும் பெண்ணுக்கு நேர்ந்த இந்த பாலியல் தொந்தரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றால தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com