“16 வயது மாணவனுடன் உடலுறவு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட டீச்சர்” - ஆபாச குறுஞ்செய்திகளை பார்த்த கணவனே முன் வந்து புகார்!

மனைவியின் கைப்பேசியை பார்த்தபோது, ஒரு பள்ளி மாணவனுடன் நெருக்கமாக பேசப்பட்ட
“16 வயது மாணவனுடன் உடலுறவு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட டீச்சர்” - ஆபாச குறுஞ்செய்திகளை பார்த்த கணவனே முன் வந்து புகார்!
Published on
Updated on
2 min read

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில், உயர்நிலைப் பள்ளி மாணவனுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முதலாம் வகுப்பு ஆசிரியை, நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் கணவர் அளித்த புகாரைத் தொடர்ந்து விசரணையை தொடங்கிய காவல்துறை இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. செயின்ட் ஜான் பகுதியைச் சேர்ந்த 25 வயதான மெக்கன்சி நாட் என்ற பெண், 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. அதுவரை அவர் மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு கடந்த மே மாதம் தொடங்கி ஆசிரியை மெக்கன்சி-யின் கணவர், தனது மனைவியின் நடத்தை குறித்து சந்தேகமடைந்ததாகவும், இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளுக்கு இடையே மனைவியின் கைப்பேசியை பார்த்தபோது, ஒரு பள்ளி மாணவனுடன் நெருக்கமாக பேசப்பட்ட குறுஞ்செய்திகளை கண்டதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் அதிகாரப்பூர்வ புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணையை தொடங்கியபோது, அந்த மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஸ்னாப்சாட் மூலம் மெக்கன்சி நாட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக மாணவன் தெரிவித்தார். பின்னர் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

விசாரணையில், குறிப்பிட்ட நாளில் மெக்கன்சி நாட், மாணவனை தனது டிரக்கில் ஏற்றி மக்கள் நடமாட்டம் குறைவான ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. அங்கு இருவரும் முத்தமிட்டுக் கொண்டதாகவும், அதன் பிறகு பாலியல் செயலில் ஈடுபட்டதாகவும் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான். தான் வேண்டாம் என்று கூறியதாகவும், நிறுத்துமாறு கூறியதாகவும், பின்னர் மெக்கன்சி அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மாணவன் அளித்த தகவல்களை காவல்துறையினர் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் சரிபார்த்தனர். குறிப்பாக, வாகனத்தில் பதிவான தகவல்கள், மாணவன் கூறிய பயண விவரங்களுடன் பொருந்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் காவல்துறை விசாரணையில், அவர்கள் முத்தமிட்டுக் கொண்டதை மட்டும் ஒப்புக்கொண்ட மெக்கன்சி, தொடர்ந்து கிடைத்த ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் போது, மாணவனுடன் பாலியல் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களிலேயே, மெக்கன்சி-யின் கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் மெக்கன்சி நாட்டுக்கு 6 முதல் 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. "குற்றத்தை ஒப்புக்கொண்டதால், பாதிக்கப்பட்ட மாணவன் நீதிமன்றத்தில் நேரடியாக சாட்சியம் அளிக்க வேண்டிய மன உளைச்சலிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். ஆசிரியர்–மாணவர் உறவை மீறி நடந்த இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் உருவாகும் தொடர்புகள் குறித்து மீண்டும் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com