“சீ... மனைவி செய்ற வேலையா இது? “மயக்க மருந்து கொடுத்து தோழியை பாலியல் பலாத்காரம்!”- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி

நம்பிக்கையில் அவருடைய வீட்டிற்கு ஒரு நாள் வருவதாக ஒப்புக் கொண்டு உள்ளார்..
vellore crime news
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சுமார் 35 வயது கொண்ட பெண் ஒருவர் ஜிம் நடத்தி வருகிறார். இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு ஏராளமானோர் உடற்பயிற்சி செய்ய வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த எப்சியா வயது 33 என்ற பெண் ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். 

எப்சியா உடற்பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்லும் போது, பெண் ஜிம் உரிமையாளரிடம் நட்பாக நெருக்கி பழகி வந்துள்ளார். மேலும் அவரது குடும்ப விவரங்களை பகிர தொடங்கியுள்ளார். அதாவது “தனது கணவருக்கு சரியாக வருமானம் இல்லை எங்க குடும்பத்திற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என அடிக்கடி தன்னுடைய சோகக் கதையைக் கூறி வந்துள்ளார். மேலும் தங்கள் வீட்டிற்கு ஒரு நாள் வர வேண்டும் எனவும் வற்புறுத்தி வந்துள்ளார். 

நட்பாக பழகியதால் அந்த பெண்ணின் மீதான நம்பிக்கையில் ஜிம்மின் பெண் உரிமையாளர் அவருடைய வீட்டிற்கு ஒரு நாள் வருவதாக ஒப்புக் கொண்டு உள்ளார். இந்த நிலையில் எப்சியா “என் மகன் பிறந்தநாள் வருகிறது நீங்கள் வீட்டிற்கு வரவேண்டும்” என்று உடற்பயிற்சி கூட உரிமையாளரிடம் வற்புறுத்தி அழைத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி உடற்பயிற்சி கூட பெண் உரிமையாளர் எப்சியா வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு எப்சியா மற்றும் அவரது கணவர் மணிவண்ணன் வயது (38) இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி கூட உரிமையாளருக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். தவிர்க்க முடியாமல் குளிர்பானத்தை குடித்துள்ளார், குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். அந்த நேரத்தில் எப்சியாவின் கணவர் அந்தப் பெண் உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை அவரது மனைவி எப்ஸியா வீடியோ எடுத்தும் உள்ளார். மேலும் அவரை நிர்வாணமாக்கி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

தொடர்ந்து மயக்கம் தெளிந்ததும் உடற்பயிற்சி கூட பெண் உரிமையாளர் தனக்கு நேர்ந்ததை அறிந்து கதறி அழுதுள்ளார். அந்த வீடியோவை வைத்து மிரட்டியும் வந்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் வீடியோவை  மற்றும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளனர். தொடர்ந்து ஆறு மாதங்களாக அவ்வப்போது அந்தப் பெண் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டி ரூபாய் 4,50,000 மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நகைகள் போன்றவற்றை பறித்துள்ளனர்

ஒரு கட்டத்தில் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார் ஜிம் உரிமையாளர். அப்போதும் உனது ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜிம் பெண் உரிமையாளர் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

குற்றம்சாட்டப்பட்ட மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி எப்சியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன், மேலும் இதேபோன்ற வேறு யாராவது ஏமாற்றி பணம் பறித்துள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவரது செல்போன்களையும் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com