விபத்து என நடமாடிய கள்ளக்காதலன்.. அம்பலமான பொய்! போன் எடுக்காம போனதுக்கு இப்படியா? திடுக்கிடும் பாண்டிச்சேரி மர்டர்!

மருத்துவர்கள் தலையில் பலத்த காயமடைந்தத்துடன், 3 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்
pondicherry murder
Published on
Updated on
2 min read

புதுச்சேரி திலகர் நகரை சேர்ந்தவர் ராஜமாதங்கி (25), இவரின் கணவர் சரவணன் சென்னையில் திருமண போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வயது குழந்தை உள்ளது. கடந்த 1ஆம் தேதி ராஜமாதங்கி தலையில் காயத்துடன் ஒருவர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயமடைந்தத்துடன், 3 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் ராஜமாதங்கி தனக்கு உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறி தலை காயத்துக்கு மட்டும் சிகிச்சை பெற்று விட்டு அந்த நபருடன் திலகர் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். 

வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து ராஜமாதங்கியின் தாயார், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீண்டும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் உடல் முழுவதும் காயம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவரின் தாயாருக்கும் இதுபற்றி எதுவும்  தெரியாத நிலையில், இது குறித்து வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட  தகவல் பேரில் போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தனர். அதில் ஏற்கனவே ராஜமாதங்கி சிகிச்சைக்கு வந்தபோது தட்டாஞ்சாவடி அருகே விபத்தில் சிக்கியதாக மருத்துவர்களிடம்  கூறியதை போலீசாரிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் விபத்து ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனிடையே  சிகிச்சை பெற்று வந்த ராஜமாதங்கி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் அந்த பெண் வந்த வாகனத்தின் எண், அவரை அழைத்து வந்தவர் யார்? என போலீசார்  விசாரணை செய்தனர். அதில் சின்ன கோட்டகுப்பத்தை சேர்ந்த சுரேந்திரன் (29) என்பவர் தன் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவரை அழைத்து  விசாரணை செய்தனர். அதில் அந்த பெண் விபத்தில் சிக்கவில்லை எனவும், சுரேந்திரன் அவரை நாயை கட்டும் பெல்ட்டால் அடித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கை தன்வந்திரி நகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், பியூடிஷனான ராஜமாதங்கி பள்ளி படிக்கும் போது அவரது வீட்டுக்கு பிளம்பர் வேலை செய்ய வந்த சுரேந்திரன் உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதை ஏற்காத ராஜமாதங்கியின் பெற்றோர், ராஜமாதங்கியை சரவணன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தம்பதிகள் சென்னையில் வசித்து வந்துள்ளனர். பின்னர் சுரேந்திரன் சிங்கப்பூருக்கு வெல்டிங் வேலைக்கு சென்று விட்டார். சில மாதம் முன்பு சின்ன கோட்டகுப்பம் திரும்பிய சுரேந்திரன், மீண்டும் ராஜமாதங்கியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சுரேந்திரன் அடிக்கடி சென்னை சென்று விடுதியில் அறை எடுத்து ராஜமாதங்கியுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதையறிந்த கணவர் சரவணன், ராஜ மாதங்கியை கண்டித்துள்ளர். இதனால் சுரேந்திரன், ராஜமாதங்கி இருவரும் சரவணனை சந்தித்து, தங்கள் காதலை தெரிவித்து, விவாகரத்து செய்யும்படி கோரினர். இதனால் மனமுடைந்த சரவணன், தனது மனைவியை திலகர் நகரில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு சென்னை சென்றுவிட்டார்.

இதன்பின் சுரேந்திரன் வீட்டுக்கு அடிக்கடி ராஜமாதங்கி சென்று வந்துள்ளார். ராஜமாதங்கி, போன் செய்தவுடன் சுரேந்திரன் எடுக்காவிட்டால், அவர் வீட்டுக்கு சென்று தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல கடந்த 2ம் தேதி சுரேந்திரன் போனை எடுக்காததால் ஆட்டோவில் அவர் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சுரேந்திரன் தாயையும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன், நாயை கட்டும் கயிற்றால் ராஜமாதங்கியை அடித்துள்ளார். அவர் வலி தாங்காமல் ஓடும்போது கால்வாயில் விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. அவரை சுரேந்திரன் பைக்கில் அழைத்து வரும்போது, தட்டாஞ்சாவடி அருகே கீழே விழுந்துவிட்டதாக மருத்துவர்களிடம் கூறும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து சுரேந்திரனை கணவர் சரவணன் எனக்கூறி, கையெழுத்திட வைத்து ராஜமாதங்கி விபத்தில் சிக்கியதாக கூறி சிகிச்சை பெற்றது தெரியவந்தது. 

இதனை அடுத்து தன்வந்திரி நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சுரேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவம் நடந்தது விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதி என்பதால் இவ்வழக்கை கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க புதுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விபத்து என நாடகமாடி, பெண் உயிரிழந்த சமத்துவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com