மகனுடன் தகாத உறவில் இருந்த தாய்! அதிரவைத்த 'காதல் மெசேஜ்கள்'

"காதலுக்காக என்னைச் சிறையில் அடைத்தால், அடைத்துக்கொள்ளட்டும்," என்று பகிரங்க வாக்குமூலம் கொடுத்த தாய் - மகன்.
சொந்த மகனை காதலித்த தாய்
சொந்த மகனை காதலித்த தாய் சொந்த மகனை காதலித்த தாய்
Published on
Updated on
2 min read

மோனிகா மாரெஸ் தனது 16 வயதில் காலேப் என்ற மகனைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த ஒரு வாரம் கழித்து, தன் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்காக, அவனைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்கும் கடினமான முடிவை அவர் எடுத்தார்.

அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயை தேட நினைத்துள்ளார். அதனால் தனது 19 வயதான காலேப் ஃபேஸ்புக்கில் தனது சொந்தத் தாயைக் கண்டுபிடிக்க முடிவு செய்யும் வரை, தாய்க்கும் மகனுக்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை. இருவரும் விடுமுறை காலத்தை ஒட்டி நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதற்கு முன்பு அவர்கள் பல வாரங்களாக குறுஞ்செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். அதன் பிறகு நேருக்கு நேர் சந்திப்பிற்குப் பிறகு, மோனிகா தனது சொந்த மகன் மீது தனக்கு "பைத்தியக்காரத்தனமான" உணர்வுகள் ஏற்படத் தொடங்கியதாக ஒப்புக்கொண்டார். விரைவிலேயே, காலேப் தன் தாயுடன் குடியேறினார். மேலும், சில வாரங்களிலேயே அவர்களின் உறவு, பாலியல் ரீதியாக மாறியது.

பின்னர் மோனிகா, தன் மகனிடம் இறுதியாகத் தன் உணர்வுகளைப் பற்றி கூறத்தொடங்கினார். "மன்னித்துவிடு, இதற்கு நீ எப்படி எதிர்வினையாற்றப் போகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உன் அம்மா, நீ என் மகன், ஆனால் நான் உன் மீது காதல் கொள்கிறேன்" என்று தன் மகனுடன் உடலுறவிற்கு பிறகு கூறியுள்ளார். காலேப் இந்த உணர்வுகளுக்குப் பதிலளித்ததாக கூறப்படுகிறது. அந்த இருவரும் நியூ மெக்ஸிகோவில் வெளிப்படையாக ஒரு ஜோடியாக வாழத் தொடங்கினர். ஆரம்பத்தில் அவர்கள் தங்கள் உறவை மறைத்து வைக்க முயன்றுள்ளனர். ஆனால், அக்கம்பக்கத்தினருக்கு இவர்கள் உறவினைக் குறித்து சந்தேகம் ஏற்பட்டது. அவர்களுடன் அருகில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட தகராறு குறித்த புகார்களைத் தொடர்ந்து காவல்துறை வரவழைக்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்த உறவின் தன்மையைக் கண்டறிந்தனர். நியூ மெக்சிகோ சட்டத்தின் கீழ் மோனிகாவும் காலேபும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அச்சட்டத்தில், இரத்த உறவு முறையில், முறையற்ற பாலுறவு நான்காம் நிலைக் குற்றமாகக் கருதப்படுகிறது. தற்போது அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், ஒருவருக்கொருவர் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டதிலிருந்து, தனக்கு மரண அச்சுறுத்தல்களும், எச்சரிக்கைகளும் வந்துகொண்டிருப்பதாக மோனிகா கூறியுள்ளார். தற்போது காலேப்பையோ அல்லது அவளுடைய மற்ற பிள்ளைகளையோ பார்க்க அவளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, "காதலுக்காக என்னைச் சிறையில் அடைத்தால், அடைத்துக்கொள்ளட்டும்," என்று மோனிகா செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார். "எங்களால் யாரையும் பிரிக்க முடியாது, நான் காலேப்பை உண்மையாகவே காதலிக்கிறேன்" என்று கூறியுள்ளார். தன் பங்கிற்கு காலேப், மோனிகாவை ஒருபோதும் உண்மையாகத் தன் தாயாகக் கருதியதில்லை என்ற அதிரவைக்கும் செய்தியைக் கூறியுள்ளார். "எனக்கு யாரும் உணவு சமைத்துக் கொடுத்ததோ அல்லது எதையும் கொடுத்ததோ இல்லை," என்று அவர் பகிர்ந்துகொண்டார். "என் வாழ்நாள் முழுவதும் எனக்கு எதுவும் கிடைத்ததில்லை, ஆனால் மோனிகா என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க மிகவும் மெனக்கெட்டாள்" என்று காலேப் தாயை பார்த்துக் கூறியுள்ளர்.

மோனிகா மற்றவர்கள் கூறும் விஷயம் குறித்த கவலைகளைப் புறந்தள்ளுகிறார். காலேப்பை தானே வளர்த்திருந்தால், அவர்களுடைய தகாத உறவு "ஒருவேளை" ஏற்பட்டிருக்காது என்றும் அவர் நம்புகிறார். ஆனால் இப்போது, ​​அவர்தான் தன் வாழ்வின் காதல் என்று உறுதியாகக் கூறுகிறார். "நான் ஒரு புதிய நபரைச் சந்தித்து அவர் மீது காதல் கொண்டது போல் உணர்ந்தேன்," என்று மோனிகா ஒப்புக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com