

உலகில் எந்த பகுதியையும் குறிப்பிட்டு இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்ற சொல்லவே முடியாது. இந்த தேசத்தின் மிகப்பெரும் அவலம். அதை சமூகம் இம்மியளவு கூட உணர்ந்ததாக தெரியவில்லை. அதன் நீட்சிதான் தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம், வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டாலும், பெண்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். மேலும், சில நாடுகளில் பொதுவெளியில் பெண்கள் பலவிதமான பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்கள், எவ்வித வயது பேதமின்றி வக்கிரத்தின் உச்சத்தின் செயல்பட்டே வருகின்றனர்.
கடந்த 2012 ஐந்தே டிசம்பர் மாதத்தில், டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் மிகக்கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் படுகொலை நடந்து 15 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அதே போன்றொரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள அட்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பியை வைத்து சித்திரவதை செய்யப்பட்ட மிக கோரமான சம்பவம் நடந்துள்ளது.
அட்கோட் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்தான் ராம் சிங்(35) இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 4 -ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார், ஆனால் அதற்கு சிறுமி அடிபணியாததால், சிறுமியை கடத்தி சென்று அவரின் கைகால்களை கட்டி, வாயை பொத்தி, அவரின் அந்தரங்க உறுப்பில் 1 அடி நீளமுள்ள இரும்பு கம்பியை வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
பண்ணையில் வேலை செய்துக்கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடியபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் உடல் நிலை குறித்து மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்த பிறகு, வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டன. அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் இடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. குற்றம் நடந்த பகுதியில் எத்தனை மொபைல் போன்கள் செயலில் உள்ளன என்பதைக் கண்டறிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தரவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். 10 -பேர் சந்தேகிக்கப்பட்டனர்.
பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் 10 -பேர் புகைப்படங்களை காட்டியதில், அவர் ராஜ் சிங்கை அடையாளம் காட்டினார். போலீசாரின் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார், இவர் மீது போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.