கணவன் பார்க்கக் கூடாத "அலங்கோலம்".. கொன்று கால்வாயில் வீசிய மனைவி - ஒரு சாதாரண "ஆட்டோ ஓட்டுநருக்கு" நேர்ந்த கொடுமை!

ரவீனா ஒரு Social Media Influencer-ஆக பிரபலமானவர்.
social media influencer murdered her husband
social media influencer murdered her husband
Published on
Updated on
2 min read

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான யூடியூபர் ரவீனா, தனது காதலன் சுரேஷுடன் இணைந்து தனது 35 வயது கணவர் பிரவீனை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை மோட்டார் பைக்கில் எடுத்துச் சென்று கால்வாயில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் மார்ச் 25, 2025 அன்று நடந்ததாகவும், இதற்கு காரணம் ரவீனாவின் திருமணத்தை மீறிய உறவுதான் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ரவீனா, ஹரியானாவின் ரேவாரி பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு Social Media Influencer-ஆக பிரபலமானவர். இவருக்கு 34,000-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். 2017-ல் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவீனாவுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். பிரவீன் ஒரு ஆட்டோ ஓட்டுநராகவும், மணல் மற்றும் கற்கள் விற்கும் கடையில் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரவீனாவின் சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் அவரது நட்பு உறவுகள் காரணமாக தம்பதியரிடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.

இதற்கிடையே ரவீனா, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஹிசார் மாவட்டத்தின் பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு யூடியூபர் சுரேஷை சந்தித்தார். இவர்களது நட்பு விரைவில் காதல் உறவாக மாறியது. இதற்கு பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ரவீனாவும் சுரேஷும் ஒன்றாக வீடியோக்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்தனர்.

இந்த சூழலில், கடந்த மார்ச் 25 அன்று, பிரவீன் வீட்டிற்கு வந்தபோது, ரவீனாவும் சுரேஷும் நெருக்கமான நிலையில் இருப்பதைக் கண்டு கோபமடைந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோசமடைந்து, ரவீனாவும் சுரேஷும் சேர்ந்து பிரவீனை அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர், பிரவீனின் உடலை ஒரு துணியால் மூடி, மோட்டார் பைக்கில் எடுத்துச் சென்று, பிவானி நகரின் வெளிப்பகுதியில் உள்ள டினோட் சாலையில் இருக்கும் ஒரு கால்வாயில் வீசினர். இந்த சம்பவம் நள்ளிரவு 2:30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணையில் சிக்கிய Influencer -கள் 

பிரவீன் மாயமானதை அறிந்த அவரது தந்தை சுபாஷ், ரவீனாவின் மீது சந்தேகம் கொண்டு காவல்துறையில் புகார் அளித்தார். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை, ரவீனாவும் சுரேஷும் பிரவீனின் உடலை மோட்டார் பைக்கில் எடுத்துச் செல்வதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரவீனாவை தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், ரவீனா தனது தகாத உறவையும், கொலையையும் ஒப்புக்கொண்டார். சுரேஷும் கைது செய்யப்பட்டு, இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

குடும்பத்தின் தற்போதைய நிலை

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பிரவீனின் 6 வயது மகன், தற்போது தனது தாத்தா சுபாஷ் மற்றும் மாமா சந்தீப்புடன் வசித்து வருகிறார். இந்த சம்பவம் பிவானி மற்றும் ஹரியானா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம், சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு மற்றும் தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் மோதல்கள் எவ்வாறு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com