“மாமியாரை கற்பழித்து கொன்ற மருமகன்” - வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்… தாயின் சடலத்தை பார்த்து கதறிய மகள்!

இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் மல்லிகா வீட்டிற்கு சென்று வசித்து வந்திருக்கிறார்...
“மாமியாரை கற்பழித்து கொன்ற மருமகன்” - வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்… தாயின் சடலத்தை பார்த்து கதறிய மகள்!
Published on
Updated on
1 min read

தெலுங்கானா மாநிலம், கர்நூல் மாவட்டம் மாவட்டம் கல்வகுர்த்தி பகுதியை சேர்ந்தவர் 60 வயதுடைய மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் திருமணமாகி வெளியூரில் வைத்து வருகிறார். இரண்டாவது மகளை அதே பகுதியில் உள்ள 40 வயதுடைய நரசிம்மா என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கூலிவேலை செய்து வரும் நரசிம்மா குடிபோதைக்கு அடிமைக்கியுள்ளார்.

எனவே தினந்தோறும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். மேலும் தேவையில்லாமல் அக்கம் பக்கத்தினர் வம்பிழுத்து வந்த நிலையில் மனைவி குடிக்க வேண்டாம் என கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மா மனைவியை சரமாரியாக தாக்கியிருக்கிறார். எனவே கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் மல்லிகா வீட்டிற்கு சென்று வசித்து வந்திருக்கிறார்.

மனைவி பிரிந்து சென்றதை தாங்க முடியாத நரசிம்மா அடிக்கடி குடித்துவிட்டு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு மல்லிகாவிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். கடந்த (பிப் 8) மல்லிகாவின் உறவினர் வீட்டில் நடந்த திருமணத்திற்கு அவரது மகள் குழந்தைகளுடன் சென்ற நிலையில் மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது வழக்கம் போல குடிபோதையில் மல்லிகா வீட்டிற்கு சென்ற நரசிம்மா அவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அதீத குடிபோதையில் இருந்த நரசிம்மா மல்லிகாவை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.

திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த மல்லிகாவின் மகள் தாயின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் நரசிம்மாவை பிடித்து விசாரித்ததில் அவரை மாமியாரை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. தன்னை தொடர்ந்து நரசிம்மனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருமகனே மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com