

உத்தரபிரதேச மாநிலம், இடவா மாவட்டம் பார்தானா அடுத்துள்ள பாடியப்பூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய ரணவீர் சிங். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பூஜா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். ரணவீர் சிங் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் காலை வேலைக்கும் சென்று மாலை வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். எனவே பூஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து வந்திருக்கிறார்.
அப்போது பூஜாவுக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபரான அர்பித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். மேலும் வெளியில் ஊர் சுற்றி திரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை அறிந்த ரணவீர் சிங் இது குறித்து தனது மனைவி பூஜாவிடம் “குழந்தைகளுக்காக நாம் சேர்ந்து வாழ வேண்டும் எனவே உனது இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்” என கூறி கண்டித்திருக்கிறார்.இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பூஜா தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். பின்னர் அதன்படி கடந்த(பிப் 09) ஆம் தேதி வேலை முடித்து வந்த கணவரை மது அருந்த அருந்த வைத்த பூஜா அவரை போதையில் சுயநினைவின்றி கிடப்பதை உருது செய்து காதலனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அர்பித் பூஜா வீட்டிற்கு சென்ற நிலையில் இருவரும் சேர்ந்து ரணவீர் சிங்கை கோடரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கின்றனர். பின்னர் பூஜா தனது குழந்தைகள் மற்றும் காதலனுடன் அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு ரணவீர் சிங் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசார் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து ரணவீர் சிங் சகோதரர் பிரதீப் யாதவ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பூஜா மற்றும் அர்பித்தை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்
இந்நிலையில் நேற்று மாலை பரதனா-பிதுனா சாலையில் உள்ள அஹ்னையா நதிப் பாலத்தில் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.