“தாயை அம்மி கல்லால் அடித்துக் கொலை!” - அண்ணனுக்கு போட்டோ அனுப்பி.. சடலத்தின் அருகேயே அமர்ந்திருந்த மகன்! காரணம் என்ன?

அண்ணனுக்கு வாட்ஸ் அப்பில் தாயின் சடலத்தை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார்
thiruchendur murder
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் அருகே தாயை மகன் அம்மி கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு அண்ணனுக்கு செல்போனில் புகைப்படம் அனுப்பிவிட்டு அருகில் அமர்ந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குமாரபுரம் அருகில் உள்ள ஜெயா நகரை சேர்ந்த அன்புமணி. இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், இவருக்கு திருமணமாகி ரேணுகா (62) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். ரேணுகாவும் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மூத்த மகன் சென்னையில் போலீஸ் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் தங்கபாலன்(27) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இன்று காலையில் அன்புமணி அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது வீட்டில் மனைவி ரேணுகா மற்றும் இளைய மகன் தங்கபாலன் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது தங்கபாலன் திடிரென தாய் ரேணுகா தலையில் அம்மி கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் தாய் ரேணுகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தாயை அடித்து கொலை செய்து விட்டு சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார்.

மேலும் சென்னையில் போலீசாக பணிபுரியும் தனது அண்ணனுக்கு வாட்ஸ் அப்பில் தாயின் சடலத்தை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் ரேணுகா உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயை கொலை செய்துவிட்டு அருகில் அமர்ந்திருந்த மகன் தங்கபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்க பாலன் தற்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப் பகலில் தாயை மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com