“பெத்து வளர்த்த அப்பாவுக்கு போய் இப்படியா” - தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்.. சொத்து பிரச்சினையால் நடந்த கொடூரம்!

அடிக்கடி தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பத்தில் தகராறு...
“பெத்து வளர்த்த அப்பாவுக்கு போய் இப்படியா” - தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்.. சொத்து பிரச்சினையால் நடந்த கொடூரம்!
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம், சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதுடைய தனபால். இவர் அதே பகுதியில் சொந்தமாக பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கும் திருமணமானதாக சொல்லப்படும் நிலையில், இவரது மகன் 42 வயதுடைய ஸ்ரீதர் அதே பகுதியில் உள்ள காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தனபாலுக்கு சொந்தமாக சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் 10 ஆயிரம் சதுர அடி பூர்வீக நிலம் உள்ளது.

ஸ்ரீதர் நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பர செலவு சேட்டு வந்த நிலையில் கடன் அதிகமாகியதாக சொல்லப்படுகிறது. எனவே அந்த கடனை அடைக்க பூர்வீக நிலத்தில் தனது பாகத்தை மட்டுமல்லாமல் சகோதரிகளின் பாகத்தையும் தனது பெயரில் எழுதி வைக்க கூறி மகன் ஸ்ரீதர் தந்தையிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் அடிக்கடி தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பத்தில் தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Admin

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீதரின் சகோதரிகள் தந்தையின் வீட்டிற்கு வந்த போது மீண்டும் சொத்து குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து தந்தை மகனை சமாதானம் செய்து சண்டையை தீர்த்துவைள்ளனர். ஆனால் மீண்டும் நேற்று மதியம் தனபாலுக்கும் அவரது மகன் ஸ்ரீதருக்கும் சொத்து குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீதர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தந்தை தனபாலை சரமாரியாக குத்தினார்.

மேலும் தடுக்க வந்த தனது சகோதரி பிரியாவையும் தாக்கியா நிலையில், படுகாயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மொய்த்தந்து உயிரிழந்தார். தொடர்ந்து கயாமடைந்த சகோதரி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஸ்ரீதரை பிடித்து கிச்சிப்பாளையம் காவல் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். மேலும் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனபாலின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com