
கர்நாடக மாநிலம் முத்தேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் நாகராஜனின் முதல் மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். பெண் குழந்தைகளுடன் நாகராஜன் தனியாக வசித்து வந்துள்ளார். எனவே நாகராஜனின் உறவினர்கள் அவருக்கு சாந்தி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கடந்த 15 வருடங்களுக்கு முன் நாகராஜை திருமணம் செய்து கொண்ட சாந்தி நாகராஜின் இரண்டு மகள்களையும் தனது குழந்தைகள் போல நன்றாகவே பார்த்துக் கொண்டுள்ளார். தற்போது நாகராஜ் மூத்த மகளான ஹேமாவிற்கு 20 வயதான நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். எனவே நாகராஜ் ஹேமாவிற்கு மாப்பிள்ளை தேடி வந்துள்ளார்.
அப்போது நாகராஜனிடம் ஹேமாவின் திருமணத்தை பற்றி பேசிய சாந்தி நாகராஜனின் தங்கை மகனான 25 வயதான கணேஷிற்கு ஹேமாவை திருமணம் செய்து வைக்கலாம் என்ற யோசனை கூறியுள்ளார். வெளியில் திருமணம் செய்து வைப்பதை விட தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் சொந்தம் விட்டு போகாமல் இருக்கும் என நினைத்து நாகராஜ் ஹேமாவுக்கும் கணேஷிற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி (ஜூன் 06) தேதி இருவருக்கும் மிக பிரமாண்டமாக இரு குடும்பத்தாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு கணேஷ் ஹேமாவை சரியாக கவனித்துக் கொள்ளாமல். அவரிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார், ஆனால் சாந்தியிடம் கணேஷ் நன்றாக பேசி அவரை வெளியில் அழைத்து செல்வது அவர் கேட்பதை வாங்கி கொடுப்பது என இருந்துள்ளார். இதனால் ஹேமா கணேஷ் இவ்வாறு நடந்து கொள்வதை நாகராஜ் இடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஹேமாவை சமாதானம் செய்த நாகராஜ் சாந்தியிடம் இதை பற்றி கூறியுள்ளார். அதற்கு “நான் மாப்பிள்ளையிடம் சொல்றேன் ஹேமாவை பார்த்துக்க சொல்லி” என கூறியுள்ளார். பிறகு கணேஷ் ஹேமாவிடம் நன்றாக பேசுவது வெளியில் அழைத்து செல்வது என ஹேமாவை பார்த்துக் கொண்டுள்ளார். வழக்கம் போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமாவை வெளியில் அழைத்து சென்றுள்ளார் கணேஷ்.
ஒரு கடையில் ஹேமாவை நிற்கவைத்து விட்டு நண்பர் அருகில் உள்ள கடையில் வேலை செய்கிறார் சென்று அவரை பார்த்து விட்டு வருகிறேன். என கூறி ஹேமாவை கடையில் விட்டு விட்டு கணேஷ் வெளியில் சென்றுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகியும் கணேஷ் திரும்பி வராமல் இருந்துள்ளார். அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் பயந்த ஹேமா தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் கதவு திறந்த நிலையில் பீரோவில் இருந்த ஆடைகள் எல்லாம் களைந்து பீரோ திறந்தபடி இருந்துள்ளது. இதனை பார்த்த ஹேமா வேலையில் இருந்த நாகராஜுக்கு போன் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த நாகராஜ் சாந்தியை தேடியுள்ளார் வீட்டில் சாந்தியும் இல்லை என்பதை அறிந்துள்ளார். பின்னர் பீரோவில் இருந்த நகை பணம் உள்ளிட்ட பொருட்களும் காணவில்லை என வீடு முழுக்க தனத்தை மகள் இருவரும் பணத்தை தேடியுள்ளனர். அப்போது ஹேமாவின் கையிற்கு சாந்தியின் பழைய போன் கிடைத்துள்ளது. அதில் இருந்த மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை பார்த்த ஹேமா அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாந்தி நாகராஜின் தங்கை மகனான கணேஷுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததும். இதனாலேயே கணேஷிற்கு ஹேமாவை திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தற்போது கணேஷ் சாந்தியுடன் சென்றதையும் ஹேமா தெரிந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து ஹேமா தனது கணவரை மீட்டுத் தர சொல்லி போலீசில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.