Royal Enfield 650 Classic review in tamil
Royal Enfield 650 Classic review in tamil

ஒரு Monster Bike இவ்ளோ கம்மியா தரங்களா - RE CLASSIC 650

கிளாசிக் லவேர்ஸுக்கு, இந்த பைக்கை ரோட்டுல பார்த்துட்டா கண் சிமிட்டவே முடியாது! CHROME ஃபினிஷ், அரும்பெரும் டீடெயில்ஸ், அழகான FUEL டேங்க் ஆர்ட், மொத்தமா ராயல் வித்தியாசமா இருக்கும்டா! ஸ்டைல் குறைவே இல்ல...
Published on
HIGHWAY LA இதோட PERFORMANCE எப்படி இருக்கு (4 / 5)

இந்த பைக் யாருக்காக? ரெட்ரோ லுக்கே வெறித்தனம், அதிலும் ராயல் என்ஃபீல்டு லவேர்ஸ்க்கு இது பண்டிகை! RE 650cc கிளாசிக் மாஸ் காட்ட வந்துருச்சு.

டிசைன்

கிளாசிக் லவேர்ஸுக்கு, இந்த பைக்கை ரோட்டுல பார்த்துட்டா கண் சிமிட்டவே முடியாது! CHROME ஃபினிஷ், அரும்பெரும் டீடெயில்ஸ், அழகான FUEL டேங்க் ஆர்ட், மொத்தமா ராயல் வித்தியாசமா இருக்கும்டா! ஸ்டைல் குறைவே இல்ல, டூயல் எக்ஸாஸ்ட், FLAT ஹேண்டில் பார், பிக் டிஸ்க் எல்லாமே பக்காவா இருக்கே!

POWER

வல்லுநர்கள் சொல்ராங்க 648cc பாரல்லல்-ட்வின் என்ஜின்! 46.3 hp பவர், 52.3 Nm டார்க்! RE SHORT GUN-னோடே SAME என்ஜின்! RE-ல இருந்து, பெரிய பைக் எடுத்துக் கொள்ள நினைப்பீங்கனா? HIGHWAY LA ஓட்ட நினைச்சா? இது நல்ல ஓப்ஷன்!

ஸ்பீடு

100 - 130kmph ஸ்வீட் ஸ்பாட்! ஜாலிய HIGHWAY ல ஓடலாம் TIRED ஆகாது

ஹேண்ட்லிங்

வல்லுநர்கள் சொல்ராங்க,243 கிலோ! 1000cc சூப்பர்பைக்-களையும் தாண்டிச்சு ஹெவியா இருக்குனு சொல்றாங்க! சிட்டில கஷ்டமா தெரியலாம், ஆனா HIGHWAY க்ரூஸ் பண்ணும்போது SUPER - AH இருக்கும்! 800mm சீட் ஹைட் NO PROBLEM

சஸ்பென்ஷன்

FRONT 43mm டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ், REAR ட்வின் ஷாக் அப்சார்பர்ஸ். ஹைவேய்ல செம்ம சூப்பர். ஆனா, அக்ரசிவ் ரைடிங்-க்கு போதாது!

பிரேக்கிங் - பிடிச்சிடும்!

320mm டிஸ்க், டூ-பிஸ்டன் காலிப்பர் (ஃப்ரண்ட்)

300mm டிஸ்க், சிங்கிள்-பிஸ்டன் காலிப்பர் (ரியர்)

ABS - டூயல் சேனல் (ஸ்டாண்டர்டா)

ரியர் பிரேக் SHARP ஆனா ஃப்ரண்ட் கொஞ்சம் சுமார் மொத்தத்துல டிசன்ட்!

டயர்ஸ்

100/90-18 (ஃப்ரண்ட், spoke wheels)

130/80-18 (ரியர், spoke wheels)

இது மட்டும் வாங்க - "Tubeless-ஏ குடுக்கல!"

விலை - சும்மாவா!

ஒரு Monster Bike இவ்ளோ கம்மியா தரங்களா ₹3,49,890 மட்டும் தானா

இந்த பைக் RE 650 lineup-ல நடுவில் வைக்கப்பட்டிருக்கு.

முடிவு –

நீங்க ஒரு கிளாசிக் பைக் LOVER அஹ? பைக், அழக ஓட்டாமலே ரசிப்பீங்களா அப்போ நிச்சயமா இது உங்களுக்கானா பைக்!

பொறுப்புத்துரப்பு :

இந்த ரிவியூ பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. விலை, ஸ்பெசிஃபிகேஷன், மற்றும் பெர்ஃபார்மென்ஸ் விவரங்கள் மாறுபடலாம். அதிகாரப்பூர்வ ஷோரூம்ல சென்று, டெஸ்ட் ரைடு பண்ணி, கன்ஃபர்ம்மா தெரிஞ்சுக்கோங்க

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com