“வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவிக்கு அரிவாள் வெட்டு” - கஞ்சா போதையில் மர்ம கும்பல் வெறிச்செயல்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்!

மர்ம கும்பலில் ஒருவரை பிடித்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து...
திருவள்ளூர்
accust
Published on
Updated on
1 min read

நாளுக்கு நாள் இளைஞர்களிடையே கஞ்சா மற்றும் மது பழக்கம் பெருகி வரும் நிலையில் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் போதையில் அவர்கள் செய்யும் குற்ற செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது போல ஒரு குற்றச்செயல் தற்போது திருவள்ளூரில் அரங்கேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாலாஜா மசூதி தெரு இங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு வசிப்பவர் முகமது அஸ்கர் வயது 47 மனைவியின் பெயர் சல்மா வயது 42 இவர்களுக்கு ஒரு ஆண்மகன் ஒரு பெண் பிள்ளை இருக்கின்றனர். 17வயதுடைய சுமையா பாத்திமா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது.

சுமையா இன்று கல்லூரியில் தேர்வு இருந்ததால் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு சென்ற மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்ட வந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் மர்ம கும்பலில் ஒருவரை பிடித்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முதற்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்க வந்த கும்பல் வீட்டில் மாணவியை பார்த்ததும் வெறிச்செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் அமைதியான இடமாக இருந்த தங்களது குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதை அதிகரித்து இருப்பதாகவும், கஞ்சா போதையில் இவ்வாறான செயல் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே மர்ம கும்பல் வந்ததா, வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com