“அங்கன்வாடி மையத்துல.. முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட டீச்சர்?” - 4 வயது குழந்தையை பரிதவிக்க விட்டு கள்ளகாதலனோடு சென்ற தாய்

வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே, பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் வில்வின் என்ற இளைஞருடன்
kanniyakumari
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரம்பை பகுதியை சேர்ந்தவர் வேணு (31). இவர் வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் வேணு இன்று நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது, தனது மனைவியை 5வருடங்களுக்கு  காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு தற்போது நான்கரை வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவரது முயற்சியால் மனைவிக்கு கற்பகோடு அங்கன்வாடியில் ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே, பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் வில்வின் என்ற இளைஞருடன் அவரது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஊர் சுற்றி வந்துள்ளனர்.   

மேலும் அந்த அங்கன்வாடி மையத்தில் வைத்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிய வந்துள்ளது. அவர்கள் கண்டித்தும், அதை பொருள் படுத்தாமல் குழந்தைகள் முன்பே முகச்சுளிப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.  இவர்களது கள்ளக்காதல் விவகாரம் குறித்து மனைவியிடம் தட்டிக்கேட்டபோது, தகராறு ஏற்பட்டள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு, தனது நான்கரை வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பியோடியுள்ளார்.

மேலும் நாகர்கோவிலில் வைத்து நேரில் சந்தித்த அவளது கள்ளக்காதலன் வில்வின், அந்த பெண்ணின் கணவரையும், குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும், இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறி மிரட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலையிட்டு, தனக்கும் தனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், திருடப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் எனவும் வேணு தனது புகாரில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com