“நிர்வாணமாக சாலையில் ஓடிய ஐடி பெண்" - நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்து செய்த செயல்.. அம்மன் சிலையை கட்டி அணைத்து தற்கொலை!

சிலையை தனது மார்போடு கட்டி அணைத்து கொண்டு ஏரி நீரில் குதித்ததாக கூறப்படுகிறது...
tejaswini and temple cctvi
tejaswini and temple cctvi
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் தேவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதுடைய தேஜஸ்வனி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு சொந்த ஊரில் குடும்பத்தினருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நள்ளிரவு நேரத்தில் தேஜஸ்வனி திடீரென வீட்டை விட்டு வெளியே வந்ததுடன், தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக சாலையில் ஓடியுள்ளார். இதற்கிடையில், சாலையில் ஓடிச் சென்ற தேஜஸ்வனி, வழியில் இருந்த கோயிலுக்குள் திடீரென நுழைந்து, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அம்மன் சிலையை கைகளில் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே வந்துள்ளார்.

பின்னர் அந்த சிலையுடன் அருகில் இருந்த ஏரியை நோக்கி வேகமாக ஓடிய அவர், சிலையை தனது மார்போடு கட்டி அணைத்து கொண்டு ஏரி நீரில் குதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஏரியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு தேஜஸ்வனியின் உடலை மீட்ட அதிகாரிகள், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தேஜஸ்வனி நிர்வாணமாக ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் தேஜஸ்வனியின் தாய் அவர் கடந்த சில வாரங்களாகவே கடும் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிவித்துள்ள நிலையில், அவர் மன அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தாரா, அல்லது இந்த சம்பவத்திற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐடி துறையில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் நள்ளிரவில் நிர்வாணமாக சாலையில் ஓடி, கோயிலில் இருந்து அம்மன் சிலையை எடுத்துச் சென்று ஏரியில் குதித்து உயிரிழந்த சம்பவம் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com