சிறுமியை சாக்லேட் ஆசை காட்டி அழைத்து சென்ற காவலாளி.. “தந்தைக்கு வந்த ஹிந்தி போன் கால்”.. தண்ணீர் தொட்டியில் கிடந்த சடலம்!

தன்னுடன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்...
Telangana Child Murder Case
Telangana Child Murder Case
Published on: 
Updated on: 
1 min read

தெலுங்கானா மாநிலம், மல்காஜ்கிரி மாவட்டம் பொள்ளாராம் பகுதியை சேர்ந்தவர் 43 வயதுடைய பெர்னாண்டஸ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டெஸ்ஸி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஆரேலியா என்ற மகள் உள்ள நிலையில் ஆர்க்கிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். பெர்னாண்டஸ் வேளாண்துறை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் காரணத்தால் டெஸ்ஸி வீட்டில் இருந்து குழந்தையை பார்த்து வந்திருக்கிறார்.

இவரது குடியிருப்புக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரை சேர்ந்த விக்ரம் குமார் என்பவர் காவலாளி வேலைக்கு வந்துள்ளார். ஆனால் ஆவர் சரியாக வேலை செய்யவில்லை மற்றும் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை என வேலையை விட்டு அனுப்பியிருக்கின்றனர். இந்த ஆத்திரத்தில் இருந்த விக்ரம் குமார் கடந்த சனிக்கிழமை (அக் 10) இரவு வெளியில் விளையாடி கொண்டிருந்த ஆரேலியாவை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தன்னுடன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் குழந்தையை கொன்று கை கால்களை கட்டி உடலை கல்லால் கட்டி திறந்த நீர் தொட்டியில் வீசியுள்ளார். பின்னர் குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்த விக்ரம் வெளியில் வந்து அங்கிருந்த மற்றொரு காவலாளியிடம் போன் வாங்கி “உங்க மகள் என்னிடம் தான் இருக்கிறாள்.. 20 லட்சம் கொடுத்து கூட்டிட்டு போங்க” என் இந்தியில் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெர்னாண்டஸ் குழந்தையை தேடி பார்த்த போது அவர் காணாமல் போனதை உறுதி செய்திருக்கிறார். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை தேடி வந்த நிலையில் அவர் சடலமாக அதே குடியிருப்பின் கீழ் தள தண்ணீர் தொட்டியில் மீட்கப்பட்டார். பின்னர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் விக்ரம் குமாரின் செல்போன் எண் மற்றும் சிசிடிவி கேமராக்களை வைத்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பழிவாங்கும் மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் 5 வயது சிறுமி வடமாநில காவலாளியால் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com