“அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி பெண் சித்ரவதை?” - கணவரின் தம்பியுடன் இருந்த கள்ளத்தொடர்பு.. பஞ்சாயத்தில் நடந்த அநியாயம்!

பெண்ணுக்கும் பொச்சய்யாவுக்கும் இடையிலான உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது...
generated image in telangana issue
generated image in telangana issue
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம் ஐலாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு கணவரின் தம்பியான பொச்சய்யா என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் (ஆக 24) ஆம் தேதி இருவரும் திடீரென வீட்டை விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதியின் கணவர், பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணைத் தேடி வந்தனர். இதற்கிடையில் (செப் 2) ஆம் தேதி அந்தப் பெண் தனது கணவரின் சகோதரர் பொச்சய்யாவுடன் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆஜரானார். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, தாங்கள் இருவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இனி ஒன்றாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கும் பொச்சய்யாவுக்கும் போலீசார் கவுன்சிலிங் மூலம் உரிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளனர்.

ஆனால், காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய இருவரும் குடும்பத்தினருடன் செல்லம் தொடர்ந்து தனியாக வீடு எடுத்து வசிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொச்சய்யாவின் உறவினர்கள், அவர்கள் இருவரும் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அக்கம்பக்கத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அங்கு திரண்டதாக கூறப்படுகிறது. எனவே ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, பெண்ணுக்கும் பொச்சய்யாவுக்கும் இடையிலான உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில், சிலர் அந்தப் பெண்ணை தாக்கியதுடன் அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசியதாக சொல்லப்படுகிறது. மேலும், பெண்ணின் ஆடைகளை களைந்து, உடலின் பல்வேறு பகுதிகளில் மிளகாய்ப் பொடி மற்றும் 'ஜீடி' என்ற திரவத்தை தடவி சித்ரவதை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுகுறித்து மேட்பள்ளி துணை காவல் கண்காணிப்பாளர் ஏ. ராமுலு விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் சாதி பஞ்சாயத்து மற்றும் பெண்ணின் ஆடைகளை களைந்து சித்ரவதை செய்ததாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் பெண் தாக்கப்பட்டதாகவும், அவரது முகத்தில் மட்டுமே மிளகாய்ப் பொடி வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உடலின் பிற பகுதிகளில் மிளகாய்ப் பொடி அல்லது வேறு திரவம் தடவி சித்ரவதை செய்ததாக கூறப்படும் தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அவரது புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவனை விட்டு அவரது சகோதரருடன் பெண் சென்ற பெண்ணை உறவினர்கள் மிளகாய் பொடி தூவி தாக்கிய சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com