“மிளகாய் பொடி தூவி அடித்துக் கொலை” - மரத்தில் கட்டி வைக்கப்பட்ட சடலம்.. சொத்து கேட்ட இரண்டாவது கணவனுக்கு நேர்ந்த சோகம்!

அங்கிருந்த அனைவரையும் கொன்றுவிடுவதாக ஆவேசமாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது..
Rajeshwari Husband Death Case
Rajeshwari Husband Death Case
Published on: 
Updated on: 
1 min read

தெலுங்கானா மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவரை மனைவி மரத்தில் கட்டி வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்திபெட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கிருஷ்ணா உடல் நல குறைவால் உயிரிழந்துள்ளார். பின்னர் ராஜேஸ்வரி சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானாவின் நர்மெட்டா மண்டலத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பானோத்து பகவான் என்பவரை இரண்டாவதக திருமணம் செய்து கொண்டு நரம்பெட் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர் . இந்ததம்பதியருக்கு இரண்டு மகள்கள் பிறந்த நிலையில் முதல் கணவரின் மகளும் தாயுடனே வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும் பகவானுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணாவிற்கு சொந்தமான சொத்துக்களை பானோத் மூன்று மகள்களும் பிரித்து தரவேண்டும் என கூறியுள்ளார். ஆனால் ராஜேஸ்வரி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோபித்துக்கொண்டு ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த போது இரண்டு நாட்களுக்கு முன்பு (அக் 11) அங்கு வந்த பகவான், கத்தியைக் காட்டி மிரட்டியதாகத் தெரிகிறது. மேலும், அங்கிருந்த அனைவரையும் கொன்றுவிடுவதாக அவர் ஆவேசமாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, அங்கிருந்த மிளகாய்ப் பொடியைக் கணவரின் முகத்தில் தூவியதாகவும், பின்னர் கயிற்றைப் பயன்படுத்தி அருகிலிருந்த மரத்தில் அவரைக் கட்டிவைத்துத் கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பகவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்பத் தகராறின் பின்னணி, உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவம் நடைபெற்ற விதம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com