“மார்க்கெட்டில் வெட்டப்பட்ட ஊழியர்” - கடைவீதியில் கத்தியுடன் துரத்தி சென்ற நபர்.. பொருள் வாங்க வந்த இடத்தில் நடந்த சம்பவம்!

பட்டப் பகலில் அதுவும் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த காய்கறி சந்தையில்...
“மார்க்கெட்டில் வெட்டப்பட்ட ஊழியர்” - கடைவீதியில் கத்தியுடன் துரத்தி சென்ற நபர்.. பொருள் வாங்க வந்த இடத்தில் நடந்த சம்பவம்!
Administrator
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காய்கறி மார்க்கெட்டில் உள்ள எஸ் ஆர் சி எனும் கடையில் பணியாளராக இருந்து வருபவர் சுப்பிரமணியன் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடையில் பணியில் இருந்த போது அங்கு வந்த இருமன் குளத்தைச் சேர்ந்த மருது பாண்டியன் என்பவருக்கும் சுப்ரமணிக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மருது பாண்டி கடையில் பயன்பாட்டிற்காக எடுத்த சுப்பிரமணியனை ஓங்கி வெட்ட முயற்சி செய்துள்ளார் சுதாரித்துக் கொண்ட சுப்பிரமணியன் விலகிய போதும் தலையில் வெட்டப்பட்டுள்ளது. அப்போதும் விடாத மறுத்து பாண்டி மீண்டும் வெட்ட முயற்சித்துள்ளார் எனவே சுப்ரமணி தனதுஉயிரை காப்பாற்றிக்கொள்ள கடை வீதியில் தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் விடாது சுப்பிரமணியனை வெட்டுவதற்காக மருது பாண்டியன் கத்தியுடன் துரத்திக் கொண்டு ஓட துவங்கியுள்ளார்.

Admin

இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் மருதுபாண்டியை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மருதுபாண்டி அவர்களையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த வாலிபர்கள் சிலர் மருது பாண்டியை பிடித்து தடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அவரிடம் இருந்த கத்தியை பறித்தனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருது பாண்டியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த சுப்ரமணியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதனால் இவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது என்பதை குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் அதுவும் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த காய்கறி சந்தையில் கையில் கத்தியுடன் ஒருவரை ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com