"கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் - கொடூரமாக சீரழித்த 23 வயது இளைஞன்!" குளிர்பானம் வாங்குவது போல் சென்று கழிவறையில் வைத்து அத்துமீறல்

கர்ப்பிணிப் பெண்ணைக் கழிவறைக்குள் வலுக்கட்டாயமாக கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
Sexual Assault Case
Sexual Assault Case
Published on
Updated on
2 min read

மளிகைக் கடையில் பணியாற்றிய கர்ப்பிணி ஊழியர் ஒருவரை கொடூரமாகக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, டெக்சாஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பல நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, 23 வயதான லோகன் மைக்கேல் பார்க்கருக்கு அமெரிக்காவில் உள்ள, மாண்ட்கோமெரி கவுண்டி நடுவர் மன்றம் தண்டனை விதித்துள்ளது. டெக்சாஸ் சட்டத்தின்படி, பார்க்கர் பரோல் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்தப் பயங்கரத் தாக்குதல் நடந்த ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, கான்ரோ ரோந்து அதிகாரிகள் பார்க்கரைக் கண்டுபிடித்துக் கைது செய்ததைத் தொடர்ந்து தொடங்கிய தீவிர விசாரணைக்கு பிறகு இந்த தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாண்ட்கோமரி கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் துப்பறிவாளர்கள், கடை கண்காணிப்பு CCTV காட்சிகளை பயன்படுத்தி பார்க்கரின் வாகனத்தை அடையாளம் கண்டு, அவரைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

2025-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் தேதி அதிகாலை நேரத்தில், 23 வயதான பாதிக்கப்பட்டவர், கான்ரோவில் உள்ள SH 105 சாலையில் அமைந்துள்ள ஒரு கடையில் இரவு நேர ஷிஃப்ட்டில் தனியாகப் பணிபுரிந்துள்ளார். அந்த சமயத்தில் குற்றவாளியான பார்க்கர் ஒரு குளிர்பானம் வாங்க வந்துள்ளார். ஆனால், ​​அவரது கட்டண அட்டை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் மீது இரக்கமடைந்த அந்த கடை ஊழியரான கர்ப்பிணிப் பெண், தனது ஊழியர் தள்ளுபடியைப் பயன்படுத்தி அவருக்கு அந்தப் பானத்தை இலவசமாக வழங்கியுள்ளார்.

ஆனால் பார்க்கரோ அங்கிருந்து செல்வதற்குப் பதிலாக, கட்டிடத்தின் ஓரமாக வாகனத்தை ஓட்டிச் சென்று, அதன் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு, அந்த ஊழியரைத் தாக்குவதற்காக மீண்டும் கடைக்குள் நழுவிச் சென்றுள்ளார். பார்க்கர் அந்த கர்ப்பிணிப் பெண்ணைக் கழிவறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவரை கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அந்த கர்ப்பிணி பெண்ணின் கைபேசியைத் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் ஓடியுள்ளார்.

பின்னர், வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைவதைக் கேட்கும் வரை பாதிக்கப்பட்ட பெண் பயத்தில் அந்த இடத்திலேயே இருந்துள்ளார். பின்னர் வாடிக்கையாளர்கள் அந்த கர்ப்பிணி பெண்ணை கண்டுபிடித்து மீட்டு பின்னர்,போலீசாருக்கு தகவலளித்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட பார்க்கர், தொடர் விசாரணைக்கு பின்னர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருதி, அவரது அடையாளமும் பெயரும் சட்ட அமலாக்கத் துறையினராலோ அல்லது ஊடகங்களாலோ பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தலைமை அரசு வழக்கறிஞர் லாரா ஹில், பாதிக்கப்பட்டவரின் அளவற்ற தைரியத்தைப் பாராட்டியுள்ளார். மேலும், பல நாட்கள் நடைபெற்ற விசாரணையின்போது அவரது சாட்சியமும் ஒத்துழைப்பும், ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் பெறுவதற்கு முக்கியப் பங்காற்றின என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com