தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை மீன் மார்க்கெட் புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய அன்பரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய அகிலா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகள் 7 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த அன்பரசன் மணவை மற்றும் குழந்தைகளை அன்புடன் கவனித்து வந்திருக்கிறார்.
ஆனால் காலப்போக்கில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்த அவர் சரிவர வேலைக்கு செல்லாமலும் பல்வேறு முறை கேடான தொழில்களில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினந்தோறும் குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். அன்பரசன் திருந்தி விடுவார் என நினைத்து அகிலா அமைதியாக இருந்த நிலையில் நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்திருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அகில கணவனிடம் வாக்குவாதம் செய்த நிலையில் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் கணவன் மனைவி இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இருப்பினும் கணவன் மனைவி இருவருக்கும் அவ்வோப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று விடியற்காலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அன்பரசன் ஆத்திரமடைந்த வீட்டில் குழந்தைக்ளுங்கு அருகில் தூங்கி கொண்டிருந்த அகிலா மீது கிரைண்டர் குழவி கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார்.
இதில் தலை நசுங்கிய அகிலா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையைசத்தம் கேட்டு எழுந்த அகிலாவின் குழந்தைகள் “அம்மா… அம்மா ..” என அலறி கத்தியுள்ளனர். பின்னர் குழந்தைகளின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் கண்முன்னே தாய் தலை நசுங்கி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.