

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரம் பகுதியில் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியில் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 12 வகுப்பு பயின்று வந்தவர் பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் கவியரசன். இவருக்கும் அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கழிப்பறைக்கு செல்லும் போது தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது.
வழக்கம் போல கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது கவியரசன் தாக்கியதில் 11 ஆம் வகுப்பு மாணவன் ஒருவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பிய நிலையில் இரு மாணவர்களும் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த (நவ 03) ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் இருந்த நிலையில் பள்ளியை முடித்துவிட்டு காத்திருந்த 11 ஆம் மாணவர்கள் 20 க்கும் மேற்பட்டோர் 12 வகுப்பு மாணவரான கவியரசன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இடி சில மாணவர்கள் சேர்ந்து கவியரசனை மட்டும் தனியாக அழைத்து சென்று சரமாரியாக தாக்கி அவரை கட்டையால் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னர் ரத்தவெள்ளத்தில் மிதந்த கவியரசனை பார்த்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவியரசர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். 11 ஆம் வகுப்பு படிக்கும் 15 மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கவியரசரின் பெற்றோர்கள் இது குறித்து தற்போது வரை எந்த அரசு அதிகாரிகளும் பேசவில்லை மற்றும் தகவல் கேட்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.