“வெட்டப்பட்ட தொழிலாளியின் விரல்கள்” - மரத்தில் கட்டி வைத்து செய்த சித்ரவதை.. வீட்டிற்கு திரும்பியவருக்கு நடந்த கொடுமை!

அப்போ என்ன அடிச்சவங்க யாருனு உனக்கு தெரியும், அதையாவது சொல்..
“வெட்டப்பட்ட தொழிலாளியின் விரல்கள்” - மரத்தில் கட்டி வைத்து செய்த சித்ரவதை.. வீட்டிற்கு திரும்பியவருக்கு நடந்த கொடுமை!
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மட்டப்பிறையூர் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் இவரது மகன் 22 வயதான சரவணன். இவர் அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு வீட்டுக்கு திரும்பி வருவதை சரவணன் வழக்கமாக வைத்திருக்கிறார். அதே போல நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்த சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் அதே மட்டப்பிறையூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யாரோ குமாரை கல்லால் அடித்ததாக சொல்லப்படுகிறது. சரியாக அதே நேரத்தில் அப்பகுதிக்கு சரவண வந்ததால் அவரிடம் குமார் “நீ தானே என்ன கல்லால அடிச்சது நீ தானே உண்மையை சொல்லிடு” என கேட்டுள்ளார் அதற்கு இவர் மறுப்பு தெரிவித்த நிலையில் “அப்போ என்ன அடிச்சவங்க யாருனு உனக்கு தெரியும், அதையாவது சொல் என்கிட்டே மறைக்கணும்னு பாக்காத” என கேட்டு சரவணனை வளமறித்து வாக்குவாதம் செய்துள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் குமார் அவரது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அங்கு வந்த குடிபோதையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், இளையராஜா மற்றும் சந்திரசேகர் ஆகிய மூவரும் இணைந்து சரவணனை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்று அவர்கள் வீட்டில் உள்ள வேப்ப மரத்தில் கட்டி வைத்து “யார் அடித்தார்கள் என்ற சொல் அப்படி சொல்லவில்லை என்றால் உன் கையை வெட்டி விடுவேன்” என சினிமா பாணியில் சரவணனின் இரண்டு கைகளிலும் உள்ள கைவிரல்களை வெட்டியுள்ளனர்.

Admin

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் போதை ஆசாமிகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். பின்னர் அவர்களின் அட்டகாசம் அதிகமான நிலையில் இதுகுறித்து போளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து போலீசார் வருவதை தெரிந்து கொண்ட குமார் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அங்கிருந்து சரவணனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பார்த்திபன், சந்திரசேகர், இளையராஜா மற்றும் குமார் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர். வேலைக்கு சென்று வந்த கூலி தொழிலாளி போதை ஆசாமிகள் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் போளூர் பகுதியில் உள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com