
திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவிகள் சிலர் திண்டுக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். தருமதுபாட்டியில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள பள்ளி கல்லூரிகள் தூரம் என்பதால் தருமத்துபட்டியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் தருமத்துப்பட்டியில் இருந்து அரசு பேருந்தில் திண்டுக்கல்லுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல் தருமத்துப் பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் கல்லூரி முடிந்து அரசு பேருந்தில் வீட்டுக்கு சென்றபோது, அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் கீழதிப்பம்பட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய காளிமுத்து என்பவர் கல்லூரி மாணவி ஒருவருக்கு பேருந்து டிக்கெட்டின் பின்புறம் அவரது தொலைபேசி எண்ணை எழுதி கொடுத்துள்ளார். இதை பார்த்த கல்லூரி மாணவி டிக்கெட்டை வாங்கிய நிலையில் கிழித்து எரிந்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு அதே பேருந்தில் வந்த மற்றொரு கல்லூரி மாணவியிடம் மீண்டும் பயணச் சீட்டின் பின்புறம் தொலைபேசி எண்ணை எழுதி கொடுத்துள்ளார். அந்த மாணவி டிக்கெட்டின் பின் புறத்தில் எழுதி இருந்த தொலைபேசி என்னை கண்டுகொள்ளாத நிலையில், மாணவியுடன் பயணம் செய்த அவரது தோழிகளுக்கு டிக்கெட் வழங்காமல் காளிமுத்து தாமதப்படுத்தி உள்ளார். பின்னர் மாணவிகள் அவர்கள் நிறுத்தத்தில் இறங்கி சென்றனர்.
மறுநாள் கல்லூரிக்கு வந்த அந்த மாணவியிடம் கண்டக்டர் “ஏன் எனக்கு போன் செய்யவில்லை” எனக் கேட்டுள்ளார் அதற்கு மாணவி சரியான பதில் அளிக்காத நிலையில் மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோருக்கு தொலைபேசி வழியாக தகவல் கொடுத்துள்ளனர். இதே போன்று அந்த கான்டெக்டர் பல மாணவிகளிடம் டிக்கெட் பின்புறத்தில் தனது தொலைபேசி எண்ணை எழுதி கொடுத்து போன் செய்து பேசச்சொல்லி கொடுமை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் தங்களது உறவினர்களுடன் தருமத்துப்பட்டிக்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து கண்டக்டரை தாறுமாறாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த கண்டக்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னிவாடி காவல் துறையினர் மாணவியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டக்டர் காளிமுத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.