

ராஜஸ்தான் மாநிலம், ஜாலூர் மாவட்டம் பின்மல் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய மங்களாரம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தாத்மி என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மங்களாரம் விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் சில குடும்ப காரணங்களுக்காக விவசாயத்தை கைவிட்ட மங்களாரம் வேலைக்காக வெளியூருக்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த தாத்மிக்கு ஒரு நாள் இரவு மங்களாரம் போன் செய்த போது போன் எடுக்காமல் அவர் நீண்ட நேரம் வேறு யாருடனோ பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனால் மனைவி மீது சந்தேகமடைந்த மங்களராம் யாருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்ட போது தனது தாயுடன் பேசியதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி இது குறித்து போனில் வாக்குவாதம் செய்து வந்த நிலையில் கடந்த வாரம் விடுமுறைக்காக மங்களாரம் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது தாத்மி தொடர்ந்து போன் பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மங்களாரம் மனைவியிடம் “நீ எவன் கூட எப்போ பாத்தாலும் பேசுற” என சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்திருக்கிறார். இதற்கிடையில் கிராமத்தில் உள்ள ஒரு வாலிபருக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது எனவே கிராமத்தில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் மீண்டும் இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த மங்களாரம் மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்திருக்கிறார்.
பின்னர் கட்டிலில் படுத்திருந்த மகள் மற்றும் கடைசி மகனையும் கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மனைவியையும் குழந்தைகளையும் மர்ம நபர்கள் கொன்று விட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் மங்களாரம் இடம் விசாரணை மேற்கொண்ட போது அவரே மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று நடனமாடியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.