கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அடுத்த பனவூர் பகுதியை சேர்ந்தவர் 31 வயதுடைய அஷ்கார். இவர் அதே பகுதியை சேர்ந்த அமீனா என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே அஷ்கார் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் அமீனாவை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அஷ்கார் தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டு அடித்த போது பின் மண்டையில் அடிபட்டு கோமாவிற்கு சென்ற நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குணமடைந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதற்கிடையில் ஆட்டோ ஓட்டி வந்த அஷ்காருக்கு சமூக வலைத்தளம் மூலம் 24 வயதுடைய அகிலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அகிலாவிற்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில் வரத்து கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே அகில அவரது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில் அஷ்காருடனான பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் கணவன் மனைவி போல ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர். அகிலா அவ்வப்போது நடன பயிற்சி கொடுக்க வெளியூருக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த (மே 29) ஆம் தேதி அகில வழக்கம் போல தமிழ்நாட்டில் உள்ள ஒரு பகுதிக்கு நடன பயிற்சிக்கு சென்ற நிலையில் குழந்தையை அஷ்காரிடம் கவனித்து கொள்ள கூறியுள்ளார். அப்போது குழந்தையை கவனித்து கொண்ட அஷ்கார் குழந்தைக்கு உணவு கொடுக்க முயற்சித்த போது ஆத்திரமடைந்து குழந்தையின் தலையை சுவற்றில் மோதியும் சரமாரியாக தாக்கியும் கொலை செய்திருக்கிறார். பின்னர் இது குறித்து அகிலாவிற்கு தகவல் தெரிவித்த நிலையில் வீட்டிற்கு வந்த அகிலா குழந்தையின் ஆடைகளை மாற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதற்கிடையில் அகிலா மற்றும் அஷ்கார் சேர்ந்து ரத்தக்கறை இருந்த குழந்தையின் ஆடைகளை எரித்து ஆதாரங்களை மறைத்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குலத்தின் எலும்புகள் உடைந்து உடலின் உட்பகுதியில் ரத்தம் கசிந்து உயிரிழந்ததை அறிந்த மருத்துவர்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது அஷ்கார் குழந்தையை அடித்து கொன்றதும் அதனை மறைக்க அகிலா உதவியதும் தெரியவந்தது. எனவே இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.