
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் 54 வயதுடைய முருகேசன். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். மேலும் முருகேசன் ஆறுமுகநேரி போலீஸ் சோதனை சாவடி அருகில் காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் சாலை ஓரத்தில் உள்ள சுடலைமாட சுவாமி கோவிலில் பூசாரியாக பூஜை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மின்தடை ஏற்பட்டதால் மனைவி முத்துலட்சுமியிடம் “வீட்டில் வெப்பம் அதிகமாக இருக்கிறது எனவே கோவிலில் சென்று ஓய்வு எடுக்க போகிறேன்” என கூறிவிட்டு காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் இருந்து முருகேசன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் சுமார் 3 மணி அளவில் மனைவி முத்துலட்சுமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு “குடிக்க தண்ணி கொண்டு வா நான் எடுத்து வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.
இதனால் மனைவி முத்துலட்சுமி கோவிலுக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அப்போது முருகேசன் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து முத்துலட்சுமி அலறிய சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் 4 பேரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த முதல் கட்ட தகவல் படி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுடலைமாட சுவாமி கோவில் கொடையின் போது ஆறுமுகநேரி பெருமாள்புரம் சேர்ந்த 26 வயதுடைய இசக்கிமுத்து என்பவர் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இதனை முருகேசன் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமடைந்த இசக்கிமுத்து மற்றும் அவரது நண்பர்களான ஆறுமுகநேரி பெருமாள் பகுதியை சேர்ந்த மாரி செல்வம் சுகுமார் (26), மேலும் மேலாத்தூர் கொலுவைநல்லூரை சேர்ந்த சங்கர் என்ற சங்கரவேல் (54) ஆகிய நான்கு பெரும் பூசாரியை கொன்றது தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.