“நான்கு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை” - வீட்டிற்கு அழைத்து சென்று சீரழித்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பின் வந்த தீர்ப்பு!

செய்வதறியாமல் அழுதுகொண்டே தனது வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தது குறித்து அவரது தாயிடம்...
lakshmana kumar
lakshmana kumar
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கடந்த மூன்று வருடங்கலாகு முன்பு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. முக்கூடல் பகுதியில் மாலை பள்ளி முடிந்து சிறுமி அவரது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்திருக்கிறார். இதனை கவனித்த அதே பகுதியை சேர்ந்த கக்கன் தெருவைச் சேர்ந்தவர் 42 வயதுடைய லட்சுமணகுமார் என்பவர் அங்கு சென்று அந்த சிறுமிஇடம் பேசி கொண்டு இருந்திருக்கிறார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியிடம் நைசாக பேசி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வீட்டில் யாருமில்லாத நிலையில் சிறுமியை தனது அறைக்குள் வைத்து கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் செய்வதறியாமல் அழுதுகொண்டே தனது வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தது குறித்து அவரது தாயிடம் தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து உடனடியாக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

nellai pocso special court
nellai pocso special court

​இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த அப்போதைய இன்ஸ்பெக்டர் அன்னபூரணி நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு  லட்சுமணகுமாரை கைது செய்தார். இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் அரசு தரப்பு வாதங்களை ஏற்று குற்றவாளி லட்சுமணகுமாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

 ​மேலும் அவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜராகி வாதாடினார். தற்போது பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீஸ் ஏட்டு யாஸ்மின் ஆகியோர் இந்த வழக்கு விசாரணைக்கு விரைவாக நடக்க சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com