நாமக்கல்லில் பரபரப்பு: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்...காவல் நிலையத்தில் தானாக சரண்...!

நாமக்கல்லில் பரபரப்பு: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்...காவல் நிலையத்தில் தானாக சரண்...!
Published on
Updated on
1 min read

நாமக்கல் அருகே தனியார் பள்ளி ஆசிரியையான தனது மனைவியை வெட்டி கொலை செய்த கணவன், தானாக முன்வந்து போலீசாரிடம் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர்:

நாமக்கல் அடுத்த தூசூர் ஊராட்சி சம்பா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா - பிரமிளா தம்பதி. இவர்களுக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். கணவன் ராஜா கூலி வேலை செய்த நிலையில், மனைவி பிரமிளா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்:

இந்நிலையில், நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவே, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன் ராஜா, தனது மனைவியை வீட்டிலிருந்த அருவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பிரமிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

சரணடைந்த ராஜா:

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற ராஜா, தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி போலீசாரிடம் சரணடைந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார், பிரமிளா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com