

தூத்துக்குடி மாவட்டம், முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதுடைய மார்ட்டின் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் கார் வாங்கி விற்கும் வேலை செய்து வந்திருக்கிறார். எனவே அடிக்கடி வேலைக்காக வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்த மார்ட்டின் இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்து விடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த (ஜன 05) தேதி கார் விற்க சென்ற மார்ட்டின் மறுநாள் காலை வரை வீட்டிற்கு வராமல் இருந்திருக்கிறார்.
இதனால் பயந்த மார்டினின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசாரை மார்டினை தேடி வந்தனர். இதற்கிடையே (ஜன 06) ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி கிராமத்தில் உள்ள மயானத்தின் வாயிற் பகுதியில் ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் சீவலப்பேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சீவலப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது உயிரிழந்தவர் முதலூரில் தேடப்பட்டு வந்த மார்ட்டின் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போலீசார் கடைசியாக மார்ட்டின் உடன் இருந்த முருகன், நம்பிராஜன், கீதியோன் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்ததில் நண்பர்களான இவர்களுக்கு இடையே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மூவரும் சேர்ந்து மார்டினை அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் குற்றவாளிகளின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த போலீசார் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் வியாபாரியான மார்டினுக்கும் ஏமன்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். இளம்பெண்ணுக்கு திருமணமாகாத நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த இளம் பெண்ணின் அண்ணன் மார்டினை நேரில் சந்தித்து பலமுறை கண்டித்திருக்கிறார். இருப்பினும் மார்ட்டின் இளம் பெண்ணுடனான பழக்கத்தை கைவிடாததால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் கூலிப்படையான முருகன், நம்பிராஜன், கீதியோன் ஆகிய மூவருக்கும் பணம் கொடுத்து மார்டினை கொலை செய்ய சொன்னது தெரியவந்துள்ளது. எனவே முருகன், நம்பிராஜன், கீதியோன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போலீசார் இளம் பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.