
கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் தோப்பு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி 38 வயதான சுதா. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் எனவே நேற்று மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள வெண்ணாறு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். மதிய நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த 40 வயதான முருகன் மற்றும் பாலக்குடி பகுதியை சேர்ந்த 23 வயதான அஜித் ஆகிய இருவரும். சுதா தனியாக ஆடுகளை மேய்த்து கொண்டிருப்பதை கவனித்து அவரிடம் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இது வெளியில் தெரியக்கூடாது என எண்ணி சுதாவை அருகிலிருந்த வெண்ணாற்றில் தள்ளிவிட்டு மூழ்கடித்துள்ளனர். சுதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி வழியே சென்ற மக்கள் முருகனை மடக்கி பிடித்த நிலையில் அஜித் குமார் தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் முருகனை கைது செய்து தப்பி சென்ற அஜித் குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண் இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.