
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் திலீப் இவரும். இவரின் சகோதரி மகன் கழுவாவும், தேனியில் பல்வேறு பகுதிகளில் வீட்டில் அலங்காரத்திற்கு பயன்படுத்தும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன் என்பவர் அறிமுகமாகி இருக்கிறார்.இதனிடையே போலி நகைகளை விற்பனை செய்ததாக மிரட்டி மோகன். கழுவாவையும் திலீப்பையும், தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
பேருந்து நிலையத்திற்கு, காரில் வந்த முகேஷுடன் சேர்ந்து மோகன் இருவரையும். தேனி அருகே உள்ள ஜெயக்குமார் என்பவரின், பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருவரையும் கட்டைகளை பயன்படுத்தி தாக்கிய நிலையில் திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திலீப் உயிரிழந்ததை கழுவாவிடம், மறைத்து “ஓடி விடு இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவோம்” என மிரட்டி அனுப்பி வைத்துவிட்டு.இறந்த திலீப்பின் உடலை சுமார் 10 அடி குழி தோண்டி தோட்டத்தில் புதைத்து உள்ளனர்.
இவர்களிடம் இருந்து தப்பி சென்ற கழுவா, நடந்த சம்பவங்களை அவர்களின் உறவினர் நிர்மலாவிடம் சொல்ல, நிர்மலா இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்த தேனி போலீசார் கழுவா கூறியதை வைத்து முகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முகேஷ் அளித்த தகவலின் படி, மேலும் ஜெயக்குமார்,சதீஷ்குமார்,சௌமியன்,முருகன், ஆகாஷ், முத்துப்பாண்டி ஆகியோரை பிடித்து விசாரித்ததில்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்,ஜெயக்குமார் இதே போல் போலி நகை மோசடியில் இரண்டு லட்சம் ஏமாந்ததால், அதே போல் இவர்கள் மோகனிடம் விற்பனை செய்ய முயற்சித்தது, தெரியவந்தது எனவே இருவரையும் விசாரிக்க அழைத்து சென்ற போது இவ்வாறு நடந்தது என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முருகனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார். முறையான நடவடிக்கைகளுடன் ஜேசிபி உதவியுடன் திலீப்பின் உடலை தோண்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை, இதுவரை கைது செய்த நிலையில் மேலும் இதில் சம்பத்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஒருவர் கொலை செய்யப்பட்டு பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டது.தேனி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்