
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மேக்கிழார் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவியும் 23 வயதில் சிவபாரதி என்ற மகனும் உள்ளனர். சிவபாரதி அவரது உறவுக்கார பெண்ணான 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பின்னால் சுற்றி வந்துள்ளார். முதலில் சிறுமி ஏற்றுக்கொள்ளாத நிலையில் சிவபாரதி “எனது தந்தை ஊர் நாட்டாமை எனவே, அவர் சொன்னால் நம்மை சேர்த்து வைத்து விடுவார்கள்” என கூறி சிறுமியை காதலிக்க வைத்துள்ளார்.
பின்னர் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியுள்ளார் சிவபாரதி. “சிறுமியிடம் நன்றாக பார்த்துக் கொள்வேன், உன்னை தான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்” என ஆசை வார்த்தைகள் சொல்லி சிறுமியை தனிமையில் இருக்க வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த அவரது தாய் சிறுமியிடம் என்ன நடந்தது என கேட்டறிந்துள்ளார். பிறகு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துள்ளனர் அப்போது சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிவபாரதி மற்றும் அவரது வீட்டிற்கு சென்று இதைப்பற்றி கேட்டபோது, சிவபாரதியின் பெற்றோர்கள், இதற்கும் தங்கள் மகனுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி துரத்தி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. எனவே சிறுமியும் அவரது தாயாரும் இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் கடந்த (பிப் 22) தேதி அன்று புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர் இன்று வரை புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் தாய் குற்றம் சாட்டுகிறார்.
மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் கேட்டல் “நாங்க மட்டும் மை போட்ட கண்டுபிடிக்க முடியும்” என கேட்டு அவமதித்ததாகவும் தெரிவித்துள்ளார் எனவே தனது மகளை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிவபாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஆட்சியர் அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டேன் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அழைத்து சென்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.