“நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர்” - ஃபோன் மூலம் தகவல் அளித்த பெண்.. காரில் வைத்து வெட்டி கொன்ற கணவர்!

இந்த பழக்கமானது நட்பாக மாறி ஹரிகிரிஷ்ணன் அடிக்கடி அஜய் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக...
“நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர்” - ஃபோன் மூலம் தகவல் அளித்த பெண்.. காரில் வைத்து வெட்டி கொன்ற கணவர்!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி அஜய். இவர் அதே பகுதியை சேர்ந்த தனம் என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் நல்லபடியாக வாழ்ந்து வந்த நிலையில் போலீஸ் அடிக்கடி அஜயை தேடி வீட்டிற்கு வந்திருக்கின்றனர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே அஜய் மனைவியை அழைத்துக் கொண்டு திருமழிசை பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.

அப்போது அஜய்க்கு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது அஜய் ஹரிகிருஷ்ணன் ஆட்டோவில் பயணம் செய்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இந்த பழக்கமானது நட்பாக மாறி ஹரிகிரிஷ்ணன் அடிக்கடி அஜய் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அஜய் மனைவி தனமும் கணவரின் நண்பர் என்ற முறையில் பேசி வந்திருக்கிறார்.

அஜய் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால் அவ்வப்போது சிறைச்சாலைக்கு சென்று வருவது வழக்கமாக இருந்த நிலையில் அப்போது தனம் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இதை சாதகமாக மாற்றிக்கொண்ட ஹரிகிருஷ்ணன் அஜய் வீட்டில் இல்லாத நேரமாக அவர் வீட்டிற்கு சென்று வீட்டில் தனியாக இருந்த தனத்திடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறதுக்கு. இதனால் அதிர்ச்சி அடைந்த தனம் இது குறித்து சிறையில் இருந்த கணவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்திருக்கிறார்.

எனவே ஜாமீனில் வெளியே வந்த அஜய் தனது நண்பர்களான ஞானம்,ரகுராம் சுதன் ஆகியோருடன் சேர்ந்து ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து கொண்டு குடிக்க சென்றிருக்கின்றனர். அங்கு ஹரிகிரிஷ்ணன் குடித்து போதையாகிய நிலையில் அவரிடம் வாக்குவாதம் செய்து அஜய் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து ஹரிகிரிஷ்ணனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்று உயிர் பிரிந்ததை அறிந்து சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பித்து சென்றிருக்கின்றனர்.

பின்னர் மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அஜயின் தந்தையை கைது செய்தனர், பின்னர் அவரின் செல்போனில் அஜய்க்கு பேசி அந்த போன் சிக்னலை வைத்து பதுங்கியிருந்த அஜய் மற்றும் அவரது நண்பர்கள் என நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com