
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைசாலி நகரில் உள்ள ஏரி நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 40% பேருக்கு திருவள்ளூர் வட்டாட்சியர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார். இந்த வீட்டு மனைகளை ஒரு சிலர் விற்பனை செய்து வருவதால் மீதி பேருக்கு பட்டா கொடுப்பதை வருவாய்த் துறையினர் நிறுத்திவிட்டனர். இந்நிலையில் வீட்டுமனை வாங்கி விற்பதில் இரண்டு கோஷ்டிகள் செயல்பட்டு வந்தனர்.
சில மனைகளை வாங்கி விற்பதில் இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. எனவே அடிக்கடி இருதரப்பினரும் வாக்குவாதங்களில் ஈடுபட்டு சண்டை போட்டு வந்தனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் 28 வயதுடைய ராஜ்கமல் என்பவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை பின் தொடர்ந்து சென்று நாட்டு வெடிகுண்டுகளை அவர் மீது வீசி உள்ளனர். அவர் இரண்டு இடங்களில் தப்பித்து வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இருப்பினும் மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று மூன்றாவது இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அப்போது அவர் தப்பியதால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ஓடிச் சென்று வண்டியில் சென்ற ராஜ்கமலை மடக்கி சரமரியாக தலை கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டனர். இதனை தடுக்க வந்த மற்றொரு நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. ராஜ்குமாரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வேகமாகச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். பிறகு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட ராஜகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்கமாலை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடம்பத்தூர் பேரம்பாக்கம் மப்பேடு பகுதிகளில் தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது உடனடியாக மாவட்ட காவல்துறை இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.