“நல்லகண்ணுவை யாரென்று தெரியவில்லை” - நடிகர்கள் எல்லாம் நாடாள ஆசைப்படுகிறார்கள்.. மரங்களின் மாநாட்டில் சீமான்!

காற்றை எங்கிருந்து வாங்கி வருவார்கள்? பிரான்சிலிருந்து ரபேல் போர் விமானம் வாங்கியது போல் காற்றை வாங்கி விட முடியுமா?
seeman and nallakannu
seeman and nallakannu
Published on
Updated on
1 min read

திருத்தணி உள்ள சைதை துரைசாமியின் அறக்கட்டளை இடத்தில் நடந்த நாம் தமிழர் கட்சியின் மரங்களின் மாநாட்டில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் “எங்கள் ஐயா சைதை துரைசாமி தற்போது நடைபெற்று வரும்மரங்களின் மாநாட்டிற்கு அவரது இடத்தை பெருந்தன்மையோடு வழங்கி உள்ளார், மனிதநேயமிக்க அவரின் இந்த செயல் இந்த இடத்தின் மூலமாக பிரதிபலிக்கிறது 87 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் முழுவதும் மரங்களாக வளர்த்து அடர்ந்த காடாக மாற்றி உள்ளார். 1991 இல் இருந்து இவர் இந்த பணியை மேற்கொண்டு உள்ளார்.

இந்த காட்டுக்குள் புலிகள் வந்தவுடன் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை இந்த அணில்களுக்கும் சேர்ந்து தான் நாங்கள் காடுகளுக்காக பாடுபடுகிறோம். மரங்களை அழித்து வருகிறீர்கள் காற்றை எங்கிருந்து வாங்கி வருவார்கள்? பிரான்சிலிருந்து ரபேல் போர் விமானம் வாங்கியது போல் காற்றை வாங்கி விட முடியுமா? நிச்சயம் நான் பச்சைப் போர்வை போர்த்தியது போல் தமிழ்நாட்டை மாற்றுவேன் சாலையில் நீங்கள் பயணித்து போனால் ஒரு பக்கம் விளைச்சல் நிலமாக இருக்கும், இன்னொரு பக்கம் நீர்த்தேக்கம் மறுபக்கம் காடுகள், மேலும் வேளாண் பண்ணையாக இருக்கும் நான் இதை சாதிக்கவில்லை என்றால் மேதகு பிரபாகரன் மகன் இல்லை.

மீத்தேன் வாயுவை தொடங்கி மன்னார்குடி வரை எடுக்க முயற்சி செய்கிறார்கள், நான் இருக்கும் வரை அவர்களை நெய்வேலியை கூட தாண்ட விட மாட்டேன். நான் ஆட்சிக்கு வந்தால் பிறந்த பெண் குழந்தைக்கு 5000 ரூபாய் வைப்புத் தொகையை உடனடியாக வங்கி கணக்கில் போடுவேன் எல்லாம் வைப்புத்தொகையும் சேர்த்து திருமணத்தின் போது 20 லட்ச ரூபாய் வரும் அதில் 10 லட்ச ரூபாய் கையில் கொடுப்பேன், மீதி பத்து லட்சத்தை வரவு வைத்து வாங்கி கணக்கை அவர்களிடமே கொடுத்து விடுவேன்.

பள்ளி மாணவர்கள் பத்து மரம் நடவு செய்தால் அவர்களுக்கு 10 மதிப்பெண் வழங்குவேன். 100 மரங்கள் நடவு செய்தால் சிறந்த தேசிய தமிழ் குடிமகன் விருது வழங்குவேன். இந்த விருதுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் ஆயிரம் மரங்கள் நடவு செய்தால் அரசு மரியாதையுடன் அவர்கள் இறுதி சடங்கு செய்யப்படும். நல்லகண்ணுவை போன்ற சிறந்த தலைவர்களின் வரலாறு தெரியாததால் தான் இன்று நடிகன் எல்லாம் நாடாள ஆசைப்படுகிறான். கலையை போற்றுவது தவறில்லை ஆனால் அதை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com