திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை அடுத்த புத்தேரி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் நவநீதம் வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு குடும்பத்தை பார்த்து வந்திருக்கிறார்.
அப்போது நவநீதத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சுகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மாறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். நவநீதம் கால்நடைகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் அந்த நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல நவநீதம் கால்நடைகளை மேய்க்க சென்ற நிலையில் உடன் தனது 10 வயது மகளையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த கள்ள காதலன் சுகுமார் நவநீதத்தை தனியாக பேச அழைத்த நிலையில் அதற்கு நவநீதம் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த சுகமார் நவநீதத்தில் கழுதை பிடித்து நெரித்திருக்கிறார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நவநீதத்தின் மகள் தனது அம்மாவை விடும்படி சத்தமிட்ட நிலையில் சுகுமார் அந்த சிறுமியின் கழுதையும் பிடித்து நெரித்ததாக சொல்லப்படுகிறது. உடனே நவநீதம் சுகுமாரை தள்ளிவிட்டு விட்டு குழந்தையை கூட்டி வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் சிறுமியை பள்ளிக்கு அனுப்பி விட்டு மீண்டும் மாடு மேய்ப்பதற்காக அந்த பகுதிக்கு சென்றபோது சுகுமார் அதே பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்திருக்கிறார்.
இதனை பார்த்து நவநீதம் கண்டித்த நிலையில் ஆத்திரம் அடைந்த சுகுமார் நவநீதத்தை அடித்து அருகில் இருந்த குப்பை கிடங்கு பகுதிக்கு இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற சுகமரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் கள்ளக்காதலனால் கொல்லப்பட்டு குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.