கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த ஹெப்பூர் பகுதியை சேர்ந்தவர் 50 வயதுடைய பரமேஷ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியிடம் விவாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்திருக்கிறார். அப்போது கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த பரமேஷ்க்கு தனது காரில் பயணியாக வந்த ஆஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஷாவிற்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காத நிலையியல் திருமணத்திற்கு பிறகு தனியாக இருவரும் வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். கேட்டரிங் வேலைக்கு செல்லும் ஆஷா தொடக்கத்தில் கணவனிடம் அன்பாக நடந்து கொண்ட நிலையில் சில வருடங்களாக தேவையற்ற காரணங்களுக்காக ஆஷா பரமேஷிடம் கோபப்பட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார். இருப்பினும் ஆஷா மீது இருந்த காதலால் அதனை பொறுத்து கொண்ட பரமேஷ் தொடர்ந்து அவருடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து பரமேஷ் மீது ஆஷா வெறுப்பு காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மன வருத்தம் அடைந்த பரமேஷ் ஆஷாவிடம் இது குறித்து கேட்ட போது “நான் இப்படி தான் இருப்பேன் நீ என்கூட இருந்த இரு இல்லை விவாகரத்து கொடுத்துட்டு போய்ட்டு” என கூறியிருக்கிறார். எனவே சந்தேகமடைந்த பரமேஷ் ஆஷாவின் நடவடிக்கைகளை கண்காணித்த போது அவர் தன்னுடன் பணிபுரியும் நபருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பது அடிக்கடி அவர்கள் தனிமையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பரமேஷ் இருவரை கண்டித்திருக்கிறார். கள்ளக்காதலை அறிந்து கொண்ட கணவன் மீது ஆஷா கோபத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
எனவே வழக்கம் போல கடந்த (ஜன 31) ஆம் தேதி வேலை முடித்து வீட்டிற்கு வந்த கணவனை கழுத்தை நெரித்து கொன்ற ஆஷா பின்னர் அவரை மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து இறுதி சடங்கு நடத்தி பரமேஷ் உடலை அடக்கம் செய்திருக்கிறார். பின்னர் கணவர் இறந்த இருபது நாட்களிலேயே தனது கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஆஷா மீது சந்தேகமடைந்த பரமேஷின் தங்கை இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். புகாரை கைப்பற்றிய போலீசார் ஆஷாவிடம் விசாரணை மேற்கொண்டதில் கள்ளகாதலனுக்காக மனைவி கணவனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. எனவே அவரை கைது செய்த போலீசார் கொலையில் அவரது கள்ளக்காதலனுக்கு தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.