“கணவரின் நண்பருடன் தனிமையில் இருந்த மனைவி” - பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொன்ற வாலிபர்.. இரண்டு மாதங்களுக்கு பின் மீட்கப்பட்ட அழுகிய உடல்!

திருமணமாகி மனைவி உள்ள நிலையில் வைத்தியலிங்கமும், மகேந்திரனும் அடிக்கடி லாரன்ஸ் வீட்டிற்கு சென்று வந்திருக்கின்றனர்...
“கணவரின் நண்பருடன் தனிமையில் இருந்த மனைவி” - பக்காவாக ஸ்கெட்ச் போட்டு  கொன்ற வாலிபர்.. இரண்டு மாதங்களுக்கு பின் மீட்கப்பட்ட அழுகிய உடல்!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் 28 வயதுடைய மகேந்திரன். தென்காசி பகுதியை சேர்ந்த இவர் பாடியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஏழு வருடங்களாக புழல் பகுதி வீடு எடுத்து வசித்து வந்தார். வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத் திறனாளியான இவர் தினந்தோறும் காலை மற்றும் மாலை வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வீடியோ கால் பேசுவது வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால் கடந்த வருடம் (டிச 7) ஆம் தேதியில் இருந்து மகேந்திரன் யாரிடமும் போன் பேசாமல் இருந்துள்ளார். மேலும் அவர்கள் போன் செய்தாலும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

இதனால் பயந்த மகேந்திரன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் வந்து புழல் காவல் நிலையத்தில் மகேந்திரனை கண்டுபிடித்து தருமாறு புகாரளித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே மகேந்திரனின் உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு அளித்த நிலையில் இது பற்றி‌ கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் மற்றும் புழல் சரக காவல் உதவி கமிஷனர் சிபு குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனின் செல்போனை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மாதங்களாக அவரது செல்போன் அணைக்கப்பட்ட நிலையில் திடீரென அவரது போன் இரண்டு தினங்களுக்கு முன்பு இயங்க தொடங்கியது.

அதன்படி அந்த போன் சிக்னலை ட்ராக் செய்த போலீசார் போனை வைத்திருந்த 45 வயதுடைய லாரன்ஸ் மற்றும் 45 வயதுடைய வைத்தியநாதன் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேந்திரன் போலவே வை பேச முடியாத மற்றும் காது கேளாத லாரன்ஸ் மாற்றம் வைத்தியநாதன் ஆகியோரும் மகேந்திரன் பணிபுரிந்த துணிக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் மூவரும் நண்பர்களாக பழகி வந்திருக்கின்றனர். இதில் லாரன்ஸ்க்கு திருமணமாகி மனைவி உள்ள நிலையில் வைத்தியலிங்கமும், மகேந்திரனும் அடிக்கடி லாரன்ஸ் வீட்டிற்கு சென்று வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் லாரன்ஸ் மனைவிக்கும் மகேந்திரனுக்கு திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அந்த லாரன்ஸ் அதிரமாடைந்து மகேந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டி வைத்தியநாதன் உதவியுடன் மகேந்திரனை தனது வீட்டிற்கு அழைத்து அடித்து கொலை செய்து உடலை அருகில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியில் போட்டு வைத்திருக்கின்றனர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் லாரன்ஸ் மற்றும் வைத்தியலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com