

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா திருவலாங்காடு ஊராட்சியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய சிறுமி லத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தினமும் பள்ளி முடித்து விட்டு தனது வீட்டுக்கு அருகில் நண்பர்களுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதனை கவனித்த அப்பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய கூலித்தொழிலாளியான நாகேந்திரன் மற்றும் கல்லூரி மாணவனான 22 வயதுடைய நெல்சன் ஆகிய இருவரும் சிறுமியிடம் பேசி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. சரியாக சிறுமி விளையாடும் நேரத்திற்கு அப்பகுதிக்கு செல்லும் இருவரும் அங்கிருந்த மற்ற குழந்தைகளிடமும் நன்றாக பேசி வந்திருக்கின்றனர்.
அதே போல் நேற்று முன்தினம் மாலை சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வெளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தநிலையில் அப்பகுதிக்கு வந்த நாகேந்திரன் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் சிறுமி லத்திகாவிடம் பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். பின்னர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பயந்த சிறுமி கத்தி கூச்சலிடவே அப்பகுதியில் இருந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு இது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் திருத்தணி போலீசாரிடம் புகாரளித்த நிலையில் புகாரை பெற்ற காவல் துறையினர் வழுக்கு பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட கூலி தொழிலாளி நாகேந்திரன் மற்றும் கல்லூரி மாணவன் நெல்சன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை பாலியல் சீண்டல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 9 வயது சிறுமி வீட்டின் அருகே வைத்து பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.