சாலையோரம் நின்று பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை… வாலிபருடன் உல்லாசத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை!

இரவு சாலையில் நின்றிருந்த திருநங்கை சில்பாவுடன் தனிமையில் இருக்க அவருக்கு பணம் கொடுத்து....
சாலையோரம் நின்று பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை…  வாலிபருடன் உல்லாசத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை!
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், போரூர் தெல்லியார் அரகம் பகுதியை சேர்ந்தவர் 35 வயதுடைய சில்பா என்ற திருநங்கை இவர் போரூர் பகுதியில் தங்கி பாலியல் தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல நேற்று இரவு பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் நின்று பாலியல் தோல் ஈடுபட்டு கொண்டிருந்த சில்பாவிடம் வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அவருடன் தனிமையில் இருக்க பணம் கொடுத்து அருகில் உள்ள குடோனிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

பின்னர் காலையில் அந்த குடோனில் சில்பா மட்டும் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார் இதனை பார்த்த அந்த குடோனில் காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் அந்த வடமாநிலத்தவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் பெயர் துர்ஜான் என்பதும் 22 வயதாகும் இவர் லோடுமேன் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சாலையில் நின்றிருந்த திருநங்கை சில்பாவுடன் தனிமையில் இருக்க அவருக்கு பணம் கொடுத்து அருகில் இருந்த குடோனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ஷில்பா துர்ஜான் பாக்கெட்டில் இருந்த 2500 ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்திருக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த துர்ஜான் அருகில் இருந்த கட்டையை எடுத்து ஷீபாவின் தலையில் சரமாரிய தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். பாலியல் தொழில் ஈடுபட்ட திருநங்கை பணம் பறித்ததால் வடமாநிலத்தவரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com