மலையின் அடிவாரத்தில் இருந்த கல்லூரி மாணவனின் உடல்… அடித்து கொன்று சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற நண்பர்கள்!

கல்லூரி படிக்கும் மாணவன் சக நண்பர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம்...
மலையின் அடிவாரத்தில்  இருந்த கல்லூரி மாணவனின் உடல்… அடித்து கொன்று சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற நண்பர்கள்!
Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டம், வேலூரில் இயங்கி வரும் புகழ் பெற்ற கல்லூரியான ஊரிஸ் கல்லூரியில் 500 க்கும் ஏற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் பி.ஏ.டிபன்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் திருவண்ணாமலை ஆரணி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய டேனி வளனரசு. இவரது வீட்டிற்கும் கல்லூரிக்கும் நீண்ட தூரம் என்பதால் வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் 3-வது மாடியில் வாடகைக்கு தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

தினமும் இரவு பெற்றோருடன் போனில் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்த டேனி வளனரசு கடந்த இரண்டு தினங்களாக பெற்றோருக்கு போன் செய்யாமல் இருந்திருக்கிறார். மேலும் பெற்றோர்களாலும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நிலையில் அவர் தனது அறையில் இல்லாததும் கடந்த இரண்டு தினங்களாக அவரை காணவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து போலீசாரிடம் புகாரளித்தனர்.

புகாரை பெற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து டேனி வளனரசு உடன் அறையில் தங்கியிருந்த 19 வயதுடைய கிஷோர் கண்ணன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வளனரசு உடன் அறையில் தங்கியிருந்த பாண்டிச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி, மற்றும் தர்மபுரியை சேர்ந்த வாலிபர் ஆகிய இருவரும் வளனரசுவிற்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை ஆத்திரமடைந்த பார்த்தசாரதி வளனரசுவை அடித்து கொலை செய்திருக்கிறார்.

பின்னர் உயிரிழந்த வளனரசுவின் உடலை பார்த்தசாரதி மற்றும் கிஷோர் கண்ணா ஆகிய இருவரும் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்று ஆந்திர மாநிலத்தில் எல்லையில் அமைந்துள்ள சித்தப்பாறை கிராம மலையடிவாரத்தில் வீசிவிட்டு வீசிவிட்டு சென்றனர். என்பது தெரிவந்துள்ளது இதனை தொடர்ந்து போலீசார் கிஷோர் கண்ணனை கைது செய்தனர். மேலும் புதுச்சேரியில் பதுங்கி இருக்கும் பார்த்தசாரதியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கல்லூரி படிக்கும் மாணவன் சக நண்பர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com