“என் அக்கா கண்டிப்பா தற்கொலை செய்யல” - பெண் எஸ்.ஐ தலையில் இருந்த காயங்கள்… காவலர் ரஞ்சித் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தார்!

முதலில் நண்பர்களாக பழகிய இருவரும் பின்னர் நெருக்கமாக பழகி வந்த நிலையில்...
“என் அக்கா கண்டிப்பா தற்கொலை செய்யல” - பெண் எஸ்.ஐ தலையில் இருந்த காயங்கள்… காவலர் ரஞ்சித் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தார்!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆரோக்கிய மாத. இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த யோவான் என்பவருடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று நிலையில் எட்டு மற்றும் பத்து வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் ஆனவன் மனைவிக்கு இடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக கணவனை பிரிந்து அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனி வீடு எடுத்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக காவல்துறையில் பணிக்கு சேர்ந்த ஆரோக்கிய மாதாவுக்கு பணியின் போது மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகிய இருவரும் பின்னர் நெருக்கமாக பழகி வந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக சொல்லப்படுகிறது. சமீப காலமாக ரஞ்சித் ஆரோக்கிய மாதாவை நேரில் சந்திப்பது குறைத்துக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஆரோக்கிய மாதா மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆரோக்கிய மாதா ரஞ்சித் குமாருக்கு வீடியோ கால் செய்து தன்னை பார்க்க வரும்படி கூறியுள்ளார். அதற்கு வழக்கம் போல காரணங்கள் சொல்லி ரஞ்சித் குமார் நிராகரித்ததாக கூறப்படுகிறது எனவே தன்னை பார்க்க வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆரோக்கிய மாத ரஞ்சித் குமாரிடம் கூறியுள்ளார். தன்னை வரவழைக்க எப்போதும் போல அவர் கூறுவதாக நினைத்து ரஞ்சித் குமார் அலட்சியமாக இருந்துள்ளார்.இதனை தொடர்ந்து ஆரோக்கிய மாதா வீடியோ கால் பேசியபடியே வீட்டிலிருந்த மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து பதறிய ரஞ்சித் குமார் உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து நடந்த சம்பவத்தை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. உடனடியாக ஆரோக்கிய மாதா வீட்டிற்கு விரைந்து சென்ற அம்பத்தூர் போலீசார் கதவை உடைத்து தூக்கிட்டு நிலையில் இருந்த ஆரோக்கிய மாதாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உதவியாளர் ஆரோக்கிய மாதா தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஆரோக்கிய மாதாவின் தங்கை “எங்க அக்கா கண்டிப்பா தற்கொலை செய்யல, அவங்க தல, கை, முகத்துல எல்லாம் காயம் இருக்கு. எங்களுக்கு அந்த ரஞ்சித் மேல தான் சந்தேகம் இருக்கு, இப்போ வரைக்கும் என்ன நடந்தது என்ற உண்மையை காவலர்கள் சொல்லவில்லை. மின்விசிறியில் படித்திருந்த தூசி கூட அப்படியே தான் இருக்கு, துக்கிமாட்டிக்கொண்டதற்கான சின்ன ஆதாரம் கூட இல்ல. ரஞ்சிதா தான் எங்க அக்காவை எதோ செய்திருக்கிறார்” என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஞ்சித் மீது கொலை முயற்சி வாழ்க்கைக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். மேலும் ஆரோக்கிய மாதாவின் உடல் காவல்துறை மரியாதை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தாயை இழந்து தவித்த மகன்களை ஆரோக்கிய மாதாவின் முதல் கணவர் தன்னுடன் அழைத்து சென்றார்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com